Kathir News
Begin typing your search above and press return to search.

கருங்காலி மாலையில் இவ்வளவு சிறப்புகளா?

கருங்காலி மணிகளினால் செய்யப்பட்ட மாலையையும் ஆபரணங்களையும் அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி காண்போம்.

கருங்காலி மாலையில் இவ்வளவு சிறப்புகளா?
X

KarthigaBy : Karthiga

  |  8 Aug 2023 10:30 AM IST

நவகிரக நாயகர்களில் செவ்வாய் பகவானுக்குரியதாக விளங்குவது கருங்காலி மாலை. இதனை அணிவதன் மூலம் அனைத்து தடங்கல்கள் நீங்கி அனைத்து காரியமும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை . இந்த கருங்காலி மாலை அதிக உறுதி தன்மை கொண்ட மரத்திலிருந்து மணிகளாக செதுக்கி 108 மணிகளை கொண்டு மாலையாக தொடுக்கப்படுகிறது. இது கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் சக்தி படைத்தது


இந்த மாலையை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்வில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். இதை கழுத்தில் அணிவதால் பைரவரின் ஆசிர்வாதம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்தால் திருமண தடை நீங்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News