Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே காட்சியில் இவரை தரிசிக்க முடியாது. தென்னிந்தியாவின் வைகுண்டம் இது!

ஒரே காட்சியில் இவரை தரிசிக்க முடியாது. தென்னிந்தியாவின் வைகுண்டம் இது!

G PradeepBy : G Pradeep

  |  1 March 2021 8:59 AM GMT

தென்னிந்தியாவின் வைகுண்டம் !! மூன்று வாசல்களை கடந்தால் மட்டுமே முழு மூர்த்தியை தரிசிக்க முடியும் அதிசயம்.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். பெருமாள் சயனக்கோலத்தில் இருக்கும் திருத்தலங்களுள் மிகவும் முக்கியமானது திருவட்டாறு அதிகேசவப் பெருமாள் திருத்தலம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வைணவத்திருத்தலம், 108



வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவாதாக எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள், 16008 சாளக்கிராம கற்களால்லும், கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையாலும் செய்யப்பட்டவர்.

தெற்கே தலை வைத்து திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்தாவரே மேற்கு நோக்கி அருள் புரிகிறார். பிரமாண்ட திருமேனியாக ஆழ்துயிலில் இருக்கும் இந்த பெருமாள் திருமேன்னி 22 அடி நீளம் உடையது. இவரை ஒரே காட்சியில் தரிசிக்க இயலாது. இவரை முழுவதும் தரிசிக்க மூன்று வாயல்களை தரிசிக்க வேண்டும். இதனை திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்று அழைக்கப்படுகிறது திருக்கர வாயிலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஶ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.




இங்குள்ள பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது . இதனால் இவரை வணங்கினால் மறு பிறவி கிடையாது என்பது நம்பிக்கை. பெருமாளின் மேனி கடுசர்க்கரைப் கலவையால் செய்யப்பட்டிருப்பதால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவருக்கே செய்யப்படுகிறது.

இங்கு பள்ளி கொண்டுள்ள ஆதிகேசவரின் திருப்பாதத்தை வட்டமிட்ட வாறு பரளியாறு ஓடுவதால், இந்த ஊருக்கு திருவட்டாறு என்று பெயர். கேசன் என்ற அசுரனை விஷ்ணு பெருமான் அடக்கிய தலம் இதுவென புராணங்கள் சொல்கின்றன.

அதிசய நிகழ்வாக சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஆதிகேசவப் பெருமாள் இந்த தலத்தில் காட்சி கொடுத்ததால் இக்கோவிலின் கருவறையில் சூரியனும், சந்திரனும் அமைந்துள்ளன்னர். இந்த கோவிலின் மற்றொரு அதிசயமாக புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தின் 6 நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேராக கர்ப கிரகத்தின் உள்ளிருக்கும் பெருமாள் மேல் விழுகிறத்உ. இந்த காட்சியை காண்பது அரிதென்பதால். இந்நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இங்கே காண முடிகிறது.

இக்கோவிலின் மற்றுமொரு தனித்துவமான அம்சமாக இருப்பது, இக்கோவில்ன் பூஜை முறை. இங்கு பூஜைகள் செய்பவரை போத்திமார் என்றழைக்கிறார்கள். அதே வேளையில் இக்கோவிலின் கட்டிடக்கலை பெரும் புகழ் பெற்றது. தனித்துவமாக சயன கோலத்தில் இருக்கும் பெருமாளின் அருகில் பரமசிவன் காட்சியளிக்கிறார். இங்கிருக்கும் சிறப்புமிக்க ஒற்றைக்கல் மண்டபம் ஒரே கல்லால் ஆனது என்பது பெரும் ஆச்சர்யம்.

இக்கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதேசி மிகவும் பிரசித்தமனது. தமிழக பண்டிகைகள் கொண்டாடப்படும் அதே வேளையில், கேரளா பண்டிகைகளான ஓணம், சித்திரை விஷு ஆகியவையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News