தங்கம் ஆடம்பரமானது மட்டுமல்ல,ஆன்மீக ரீதியிலும் நன்மையானது. ஆச்சர்ய தகவல்
By : G Pradeep
ராசி கற்களின் ஆன்மீக பலன்கள் நாம் அறிந்ததே. பல தரப்பட்ட மக்கள் ஜாதி, மதம், இனம் ஆகியவற்றை கடந்து தங்கத்தை அணிகின்றனர். சிலர் மகிழ்ச்சிக்காக, அன்பின் அடையாளமாக, அதிர்ஷ்டம் வேண்டி அணிகின்றனர்.
தங்கம் அணிவதின் முதன்மை நன்மை என்பது உடலில் உள்ள தேவையில்லாத ஆற்றலை போக்கி உடலில் உள்ள தெய்வீக தன்மையை தக்க வைப்பதாகும். தங்கம் என்கிற மதிப்புமிகு உலோகத்தை வெறும் தகுதியின் அடையாளமாக மட்டுமே பெரும்பாலனவர்கள் பார்க்கின்றனர். ஆனால் பகட்டு என்பதை தாண்டி, அதனை அணிவதால் பல நல்ல ஆற்றல்களை நம் உடல் ஈர்க்கிறது.
தங்கத்தில் இருக்கிற புனித ஆற்றல்கள் குறித்த ஆய்வுகள் பண்டைய சீனாவிலும், பெர்சியா மற்றும் இந்தியாவில் நடந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி தங்கம் என்கிற உலோகம் உளவியல் ரீதியாக தன்னம்பிக்கையை ஊட்டும்.
கைகளில் அணிகிற மோதிரத்திற்கு நல்ல ஆற்றலை ஈர்க்கும் தன்மை உண்டு. ஆனால் அணிகிற விரல், ராசி கல் போன்றவைகளை பொருத்து அதன் பலன் மாறுபடும். பொதுவாக சொல்லும் பலன் என்பது, பெண்கள் இடது கைகளிலும், ஆண்கள் வலது கைகளிலும் அணிவது நலம் என சொல்லப்படுகிறது.
பொதுவாக தங்கம் என்பது பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது செளபாக்கியத்தை குறிக்கிறது. இது ஜோதிட ரீதியாக அனைத்து கிரகங்களுடனும் தொடர்புடையது என்ற போதும், குருவின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜோதிட ரீதியாக சொல்லப்படும் சில குறிப்புகளில் சிலவை இங்கே, சிறு விரலில் மோதிரம் அணிவதால் சளி, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம். புகழ், பணம் போன்றவற்றிற்காக மோதிரம் அணிபவர் என்றால் நடுவிரலில் அணியலாம்.
உங்கள் கவனம் சிதறுகிறது எனில், கவனக்குவிப்பை பெற சுட்டு விரலில் மோதிரம் அணியலாம். அடுத்து திருமண பந்தத்தில் பிரச்சனை இருப்பின் அல்லது திருமணம் சார்ந்த பிரச்சனை இருப்பின் கழுத்தில் செயின் போன்ற ஆபரணம் அணிவது நல்ல சகுனங்களை ஏற்படுத்தி தரும்.
தங்கம் சார்ந்த வேலகளை தங்கள் தொழிலாக கொண்டிருப்பவர்கள். தங்கத்தை காலில் அணியக்கூடாது என்பது நம்பிக்கை. தங்கம் மஹாலட்சுமியின் அம்சம் என்பதாலும், செய்யும் தொழில் தெய்வம் என்பதாலும் இவ்வாறு சொல்லப்பட்டது. கனவில் தங்கம் வந்தால் அது முகத்தில் அல்லது தோல் நோய் போன்றவைகளை உருவாக்கலாம். ர