Kathir News
Begin typing your search above and press return to search.

பறவைகளுக்கு உணவளிப்பதன் ஆன்மீக முக்கியத்துவம் என்ன?

பறவைகளுக்கு உணவளிப்பதன் ஆன்மீக முக்கியத்துவம் என்ன?

நன்றி: BigStock

G PradeepBy : G Pradeep

  |  13 April 2021 12:30 AM GMT

உலகெங்கிலும் இருக்கும் மக்களில் பலர் பறவைகளுக்கு தினசரி உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மனித இனத்தை தவிர்த்த மற்ற உயிரினங்களுடன் நாம் பரிச்சயமாகவும், இணக்கமாகவும் இருப்பது நன்மையே.

ஆனால் நாம் வழக்கமாக பறவைகளுக்கு உணவளிப்பதற்கும், ஜோதிட உதவியுடன் பரிகாரங்களுக்காக, நல்வாழ்விற்காக பறவைகளுக்கு உணவளிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.



பொதுவாக நீங்கள் பறவைகளுக்கு உணவளிக்கிறீர்கள் எனில், எந்த வகையான உணவினையும் வழங்கலாம். ஆனால் ஜோதிட ரீதியான பலன்களை பெற வேண்டுமெனில், குறிப்பிட்ட உணவுகளை, குறிப்பிட்ட நாளில்-நேரத்தில், குறிப்பிட்ட பறவைக்கு வழங்குவதன் மூலம் கோள்களின் தாக்கங்களில் இருந்து நாம் தப்ப முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

வாரத்தில் இருக்கும் ஏழு நாட்களும் ஒவ்வொறு கோள்களுடன் தொடர்புடையவை. எனவே நமக்கு எந்த கோளின் நன்மை நிகழ வேண்டுமோ அந்த கோள்களுக்குரிய நாளில், அதற்குரிய பறவைக்கு உணவினை நாம் வழங்க வேண்டும்.

குறிப்பாக மறைந்துவிட்ட நம் முன்னோர்களுக்கு நிறைவினை அளிக்கும் விதமாக காக்கைக்கு உணவளிப்பது நம் கலாச்சாரத்துள் ஒன்றாக அனுசரிக்க்கப்படுகிறது.

உதாரணமாக்க, புதன் கிரகம் உங்களுக்கு சாதகமாக இல்லாத வேளையில் கிளிகளுக்கு உணவளிப்பது நன்மையை தரும். அதை போலவே ஒருவருக்கு பித்ரு தோஷத்தால் பிரச்சனை எனில், சனி கிரகம் சாதகமாக இல்லாத போது காக்கைக்கு தினசரி உணவு வழங்கலாம்.



சந்திரன் உங்களுக்கு சாதகமாக இல்லாத போது, பறவைகளின் தாகத்தை போக்க அவைகள் நீர் அருந்துவதற்கான சூழலை உங்கள் வீட்டு கூரையின் மீதோ அல்லது எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் நீங்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கலாம்.

செவ்வாய் உங்களுக்கு சாதகமாக இல்லாத போது பறவைகளுக்கு இனிப்பு பலகாரங்களை வழங்குவது நல்ல பலனை அளிக்கும்.

பறவைகளுக்கு உணவளிப்பதென்பது நல்ல பழக்கங்களுள் ஒன்று. நாம் பறவைகளுக்கு உணவளிக்கிறோம், அந்த உயிரினங்களுக்கு உதவுகிறோம் என்று நினைக்கலாம். உண்மையில் நாம் நமக்கு நாமே உதவிக்கொள்கிறோம். எனவே சுயநலம் விடுத்து, உண்மையில் நம் நல்வாழ்வோடு சேர்த்து மற்ற உயிரினங்களும் நலமாக இருக்க வேண்டும் என்ற பொது நலம் மேலோங்க இந்த பரிகாரங்களை நாம் செய்ய வேண்டும்.

எனவே உங்கள் சுயநலத்திற்காக என்றில்லாமல், பறவையை நேசியுங்கள், பறவைக்கு உணவளியுங்கள். மேலும் உங்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்து உங்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்திற்கு ஏற்ப பரிகாரங்களை செய்வது மேலும் நல்ல பலன்களை தரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News