திருஷ்டி கழிக்க எலும்பிச்சையை பயன்படுத்துவது ஏன்? ஆச்சர்ய தகவல்!
காலம் காலமாக மக்கள் எலும்பிச்சையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவை வெறும் சமையலுக்கு மட்டும் பயன்படும் பொருளாக இல்லை. நம் மரபில் எலும்பிச்சைக்கு என்று தனி முக்கியத்துவம் உள்ளது. இந்த சிறிய பழம் நல்கும் பலன்கள் ஏராளம்.
இதை உணவாக உட்கொள்கிற போது உடலை சுத்திகரிக்கிறது. ஆனால் இத்துடன் இதன் சிறப்புகள் முடிவதில்லை உடலை தாண்டி இது இருக்கும் இடத்தின் சுற்றுப்புற சூழலும் சேர்ந்தே சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்மறையான ஆற்றலை நீக்கும் வல்லமை அந்த சிறிய பழத்திற்கு இருப்பது ஆச்சர்யமே.
நம் மரபு மட்டுமின்றி உலகெங்கிலும் எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கு எலும்பிச்சையே பயன்படுத்தப்படுகிறது. காரணம் இது ஒரு இயற்கை நாசினி. தான் இருக்கும் இடத்தை சுத்திகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. எலும்பிச்சை என்பது அன்பை, வெளிச்சத்தை அடையாளப்படுத்துவது. நல்ல அதிர்ஷ்டத்தை ஒருவருக்கு கொடுக்க கூடியது. அதனால் தான் ஒரு சிலர் தம்மிடம் ஆசிர்வாதம் வாங்குபவர்களுக்கு மற்றும் சந்திப்பவர்களுக்கு எலும்பிச்சை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
உடலின் வெளியே உள்ள அழுக்குகளை நீக்க தினசரி குளியலின் போது ஒரு சில எலும்பிச்சை சொட்டுகளை அதில் விட்டு குளித்து வர புறத்தில் உள்ள அழுக்குகளும், உடலில் உள்ள அழுக்குகளை நீக்க தினசரி எலும்பிச்சை சாற்றை குடிப்பதும் நல்லது. சுற்றுசூழலை சுத்திகரிக்க வேண்டுமெனில் பல்வேறு வகையில் எலும்பிச்சையை பயன்படுத்துவது வழக்கம்.
வீட்டின் வாசலில் எலும்பிச்சையை கட்டுவதும், தொழில் நடக்கும் இடங்களில் கண்ணாடி குவளையில் எலும்பிச்சையை இட்டு வைப்பதும் இதனால் தான். இவ்வாறு செய்வதால் கண் திருஷ்டி, மற்றவர்களுக்கு நம் மீதான வஞ்சம் பொறாமை போன்ற எதிர்மறை ஆற்றல்களை இந்த எலும்பிச்சை ஈர்த்து கொள்ளும்.
இந்த தன்மையினால் தான் எலும்பிச்சையை உடலெங்கும் சுற்றி அல்லது தலை பகுதியை சுற்றி அதனை சில பகுதிகளாக பிரித்து திருஷ்டி கழிக்கிறார்கள். உளவியல் ரீதியாக எலும்பிச்சை குறித்து ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. அதாவது இயல்பிலேயே தீயவற்றை அளிக்கும் ஆற்றல் எலும்பிச்சைக்கு இருப்பதால் ஒருவர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ சோர்வாக அல்லது பாரமாக உணர்ந்தால். எலும்பிச்சை சாற்றை தண்ணீரில் கலக்கி எடுத்து கொள்ள வேண்டும். குடிக்கும் முன் இந்த எலும்பிச்சை நம் உடலிலும் மனதிலும் உள்ள அனைத்து நச்சுகளையும் நீக்கிவிடும் என ஒருவர் கற்பனை செய்து அந்த நீரை அருந்தினால் நல்ல பலன் கொடுக்கும் என்கின்றனர். இது வெறும் நம்பிக்கை சார்ந்ததல்ல, தண்ணீருக்கு நியாபக சக்தி உண்டு என்பது ஆய்வுகளில் கண்டறிந்த உண்மை.
இத்தனை நலன்களும் இருப்பதால் தான் பெரும்பாலனவர்கள் எலும்பிச்சை மரத்தை வீட்டின் முன் நட்டு வளர்கின்றனர்.