Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மீக பாதையில் பயணிப்பவர்களுக்கு ஸ்டிக்கர் போட்டு உகந்ததல்ல ஏன்?

ஆன்மீக பாதையில் பயணிப்பவர்களுக்கு ஸ்டிக்கர் போட்டு உகந்ததல்ல ஏன்?
X

நன்றி: Alamy

G PradeepBy : G Pradeep

  |  22 April 2021 12:00 AM GMT

சில காலமாக மேலை நாட்டில் வாழும் மக்கள் இந்திய கலாச்சாரத்தின் ஆதிக ஈடுபாடு கொண்டு வருகின்றனர், குறிப்பாக இந்தியர்களின் பாரம்பரியம், உணவு முறைகள், உடைகள் போன்றவைகளை அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இந்தியர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து அலங்காரப்படுத்தி கொள்ளவும்,சடங்கு சம்பிர்தாயங்களின் குறியீடுகளான ருத்ராட்சம், பொட்டு, போன்றவைகளை அணிந்து கொள்வதை நம்மால் கவனிக்க முடிக்கிறது. இவ்வாறு செய்வதால் அவர்கள் இந்து மதத்தின் அருகில் இருப்பதை போல் உணர்கிறார்கள்.


குறிப்பாக பொட்டு என்கிற அழகியல் அம்சத்தை அவர்கள் பெரும்பாலும் அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். பொட்டு என்கிற அம்சத்தை புருவ மையத்தில் வைப்பதையே சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. ஆண்கள் நெற்றியில் திலகமிடும் போதும், பெண்கள் அதை பொட்டாக சூடும் போதும் புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரம் தூண்டப்பட்டு அவர்களை சுற்றி பல நல்ல அதிர்வுகள் ஏற்படுகின்றன.

காரணம் ஆக்ஞா சக்ரத்தில் தான் இடகலை, பிங்கலை, மற்றும் சுசும என்கிற மூன்று முக்கிய புள்ளிகள் சங்கமிக்கின்றன. யோக அறிவியலின் படி மற்ற ஐம்புலன்களும் பிரபஞ்ச ஆற்றலோடு இசைந்திருக்கும் போது இந்த புள்ளியே மனதின் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

எனவே இந்த சக்கரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்காமல் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்திருப்பதென்பது சாத்தியமில்லை. அப்படி இணைந்திருந்தால் மட்டுமே உங்களுக்குள் இருக்கும் உள்ளாற்றலை உங்களால் உணர முடியும்.


உங்கள் உள்ளாற்றலை உணர்கின்ற போது அதில் எழும் உள்ளார்ந்த சக்தியின் மூலம் உங்கள் மூளையுடன், உங்கள் மனதுடன் தொடர்பு கொண்டிருக்க முடியும். அப்படியிருக்கிற போது இனி நடக்கவிருக்கும் செயல்கள் தெளிவுற உங்களுக்கு பிடிப்படும்.

ஒரு மனிதர்,, பூஜை, யாகம், ஹோமம் போன்ற இடத்தில் அமர்கிற போது, அவர் திலகம் அல்லது பொட்டு வைத்திருப்பார் எனில் அந்த அக்ஞா சக்க்ரம் மேலும் வலுவாக தூண்டப்படும்

குங்குமம் போன்ற இயற்கையான திலகங்களை நேரடியாக நெற்றியில் வைக்கிற போது மட்டுமே பொட்டு என்கிற அம்சத்தின் நோக்கம் முழுமையாக நிறைவு பெறுகிறது. இதை தவிர்த்து இன்றைய நவீன யுகத்தில் பயன்பாட்டிலிருக்கும் ஸ்டிக்கர் பொட்டு போன்றவைகளை பயன்படுத்துகிற போது அது அக்ஞா சக்கரத்திலிருந்து உருவாகும் ஆற்றலை தடுப்பதாகவே அமைந்துவிடுகிறது.

எனவே நீங்கள் ஸ்டிக்கர் பொட்டினை பூஜை , யாகம், ஹோமம் போன்ற இடங்களில் பயன்படுத்துகிற போது அது நீங்கள் பிரபஞ்ச ஆற்றலுடன் இணைவதை தடுக்கிறது. பண்டைய காலங்களில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் சந்தனம், குங்குமம், விபுதி போன்றவைகளை நெற்றி புருவத்தின் மத்தியில் வைத்து வந்தனர். ஆனால் இன்றோ உடைக்கு பொருத்தமான வண்ணத்திலும் மற்ற காரணங்களுக்காகவும் ஸ்டிக்கர் பொட்டை பயன் படுத்துகின்றனர். நம்முடைய பண்டைய நாகரீகம் இன்று திரிந்துவிட்டிருக்கிறது. அதுவே இன்றைய நவீன அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் அது நம் நல்வாழ்விற்கு விளைவிக்கும் பாதங்களை நாம் அறிதல் எப்போது…..?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News