சிவன்மலை கோவில்: ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை காரணம் என்ன?
சிவன்மலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வேல் வைத்து பூஜை.
By : Bharathi Latha
திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் என்பது ஒரு பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும். குறிப்பாக இந்த கோவிலில் உள்ள சிறப்பான அம்சம் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருளை வைத்து வழிபடுகிறார்களோ? அதற்கு ஏற்ற வகையில் வாழ்க்கையில் விளைவுகள் உலகத்தில் அரங்கேறும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சுப்பிரமணிய சுவாமியை பக்தர்களின் கனவில் நேரில் தோன்றி ஒரு குறிப்பிட்ட பொருளை கூறி அந்த பொருளின் அந்த பொருள் கோவிலில் முன் மண்டபத்தூரில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவாராம்.
உத்தரவு பெற்ற பக்தர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இதுதான் அங்கு இருக்கும் வழக்கம், அடுத்த பொருள் பக்தர்கள் கனவில் உத்தரவாக வரும் வரை அந்த உத்தரவு பெட்டியில் அந்த பொருள் வைக்கப்படும். உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் காலத்தில் அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அது நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட பொழுது நவீன பெருக்கிய வாகனங்களினால் சைக்கிள் பயன்பாடு குறைந்து போனது. மேலும் துப்பாக்கி,தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட பொழுது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. இந்த ஒரு சூழ்நிலையில் தற்பொழுது சேலம் மாவட்டம் ஜாஹிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாத சிவாச்சாரியார் அவர்களின் கனவில் தோன்றிய சுப்பிரமணிய சுவாமி வேல் வைத்து பூஜிக்க உத்தரவிட்டார். அதற்கு முன்பு வரை நெற்கதிர் வைத்து பூஜக்கப்பட்ட வந்தது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar