சூரிய வணக்கம் செய்வதால் உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றும் வழி இதோ!
By : Dhivakar
நமக்கு நினைவு தெரிந்து நம் முன்னோர்கள் அல்லது வயோதிகர்கள் அதிகாலை எழுந்து சூரியனுக்கு நீர் அர்பணிப்பதை கண்டிருப்போம். இதன்னை சூரிய வணக்கம் என்று சொல்வார்கள். அதிகாலையில் சூரியனுக்கு நீர் அர்பணிப்பதால், நமக்கு ஏராளமான நேர்மறை அதிர்வுகளும், ஆற்றலும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்று அந்த ஆற்றல் அந்த நாளை சிறப்பாக கையாள உதவுகிறது என்பது அறிவியல் கூற்று.
இந்து மரபின் படி சூரியன் என்பது இந்த பிரபஞ்சத்தின் ஆன்மா. ஒளியை நல்கும் சூரியனுக்கு நாம் நீரை வார்ப்பதன் மூலம், சரியான வழியில் செல்வதற்கான நல்ல மார்க்கத்தை சூரியன் நமக்கு காட்டுவதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி இவ்வாறு நாம் தொடர்ந்து செய்வதன் மூலம் உளவியல் ரீதியாக நமக்குள் சுய ஒழுக்கம் பிறந்து அவை உடல், மனம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் மீதான சமநிலையை நமக்கு ஏற்படுத்துகிறது.
சூரியனின் முதல் கதிரொளிக்கு அலப்பரியா சக்தி இருப்பதாகவும், அது நம் மீது படுகிற போது அந்த நாள் சிறப்பான நாளாக அமையும் எனவும் சொல்லப்படுகிறது. தினசரி சூரியனை வழிபடுவதாலும், குறிப்பாக ஞாயிறுகளில் "ஆவும் சூர்யாய நமஹ " என்கிற மந்திரத்தை சொல்லி வழிபடுவதால் நமக்கு சகலவிதமான நன்மை, ஆரோக்கியம், செல்வம் கிடைக்கும்.
அதிகாலை குளித்து, சுத்தமான உடை உடுத்தி செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பி அஷ்டகந்தம் சேர்த்து, ஒரு சில சிவப்பு நிற பூக்கள் சேர்த்து அதில் சிறிது அட்சதையையும் சேர்த்து "ஆவும் சூர்யாய நமஹ " எனும் மந்திரத்தை பாராயணம் செய்து சூரியனுக்கு அர்பணிப்பது மிகவும் உகந்தது என சொல்லப்படுகிறது.
புனித நீரை சூரியனுக்கு அர்பணித்த பின், நிலத்தில் தலை வணங்கி சூரியனை வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடல் ரீதியான மன ரீதியான பலம் பெருகி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் ஒருவருக்கு இயல்பாகவே பிறக்கிறது. மேலும் இது நமக்குள் இருக்கும் அச்சத்தை போக்கி தைரியமான தன்மையை வெளிப்படுத்த செய்கிறது. சூரிய வழிபாடு ஒருவருக்கு சிறந்த அறிவாற்றலை ஞானத்தை வழங்கும். நீங்கள் தொடர்ந்து சூரியனை வணங்கி வந்தால் அகங்காரம், கோபம், பேராசை, பொறாமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளில் இருந்து விடுபட முடியும் என்பது நம்பிக்கை.
அதுமட்டுமின்றி ஒருவரால் உச்சி வெயிலை தாங்கி வழிபடுவது என்பது உடல் ரீதியாக முடியாது என்பதாலும், சூரியனின் முதல் கதிரொளியில் இருக்கும் முழுமையான ஆற்றலை ஒருவர் பெற வேண்டும் என்பதாலும் அதிகாலையில் எழுந்து வணங்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
Image : One India Tamil