Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திரனின் நோய் தீர்த்த சுந்தர பெருமாள் ஆலயம்!

சுந்தரம் என்றால் அழகு என்பது பொருளாகும். அப்படி சுந்தரனாக பெருமாள் வீற்றருளும் ஓர் அற்புத தலம் தான் பாபநாசம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில்.

இந்திரனின் நோய் தீர்த்த சுந்தர பெருமாள் ஆலயம்!
X

KarthigaBy : Karthiga

  |  18 May 2024 1:57 PM GMT

ஒரு சமயம் இந்திரனுக்கும் சாபத்தால் வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. அதோடு தனது இந்திர பதிவியையும் இழந்தான். சாதாரண மானிடனாக மாறி பூலகை அடைந்தார். விமோசனம் வேண்டி அலைந்து திரிந்தான். பின் இச்சுந்தர வனத்தை அடைந்த இந்திரன் நாரதரின் தரிசனம் கிடைக்கப்பெற்றான்.அவர் இந்திரனுக்கு 360 வெண் பூசணிக்காய் தினமும் ஒரு அந்தணர் வீதம் 360 அந்தணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வெண்குஷ்ட நோய் நீங்கும் என்று ஆலோசனை கூறினார்.அதன்படி வெண்பூசணிக்காயை தினமும் ஓர் அந்தணர் வீதம் கொடுத்து வந்தார் இந்திரன் .

ஒருநாள் அந்தணர் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை .பல இடங்களில் தேடியும் அந்தணர் ஒருவரும் அகப்படவில்லை .மிகவும் மனம் வருந்தினான் இந்திரன் .நாராயணரை வேண்டி நின்றான் .மனமிரங்கிய மலையப்ப சுவாமி ஓர் ஏழை அந்தணராக இந்திரன் முன் வந்து நின்றார். மனமகிழ்ந்த இந்திரன் அவருக்கு வெண்பூசணியை தானம் செய்தான். என்ன ஆச்சரியம் உடனடியாக இந்திரன் வெண்குஷ்ட நோய் நீங்கப் பெற்று பழைய நிலையை அடைந்தார். திருமாலும் தனது அந்தண ரூபத்தை மாற்றிக் கொண்டு பன்னீர் மரத்தடியில் சவுந்தரவல்லி தயார் உடன் சௌந்தரராஜ பெருமாள் ஆக சுந்தர ரூபத்தில் காட்சி அருளினார் .

ஊரின் உட்புறம் உயரிய மதில்கள் கொண்டு ஏழு கலசங்களுடன் ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்தவாறு கம்பீரமாக காணப்படுகிறது. மகா மண்டபம், அர்த்தமண்டபம் கருவறை அமைப்பில் பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் கிழக்கு நோக்கி ஸ்ரீதேவி பூதேவியர்களுடன் சௌந்தரராஜ பெருமாள் அழகே வடிவாய் காட்சி தருகிறார் .மும்மூர்த்தி தலமாக திகழும் இப்பகுதியில் வடக்கு மகமாக பிரம்மாவும் தென்முகமாக ருத்ரரும் அருள்பாலிக்கின்றனர் .

இந்த ஆலயம் சோழர்களின் கலைப்பொக்கிஷமாக திகழ்கிறது. மாத மாதம் வரும் திருவோண நட்சத்திரம் அன்று இத்தல பெருமாளுக்கு திருமஞ்சன சேவை நடக்கிறது .அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம் தினமும் காலை 6:00 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் பாபநாசத்திற்கு அருகே 2 கிலோமீட்டர் தொலைவிலும் சுந்தரவனம் என்ற இவ்வாலயம் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News