Kathir News
Begin typing your search above and press return to search.

இராமாயணத்திலிருக்கும் ஆச்சர்ய கேள்விகள் - விடை தெரியுமா உங்களுக்கு?

இராமாயணத்திலிருக்கும் ஆச்சர்ய கேள்விகள் - விடை தெரியுமா உங்களுக்கு?

இராமாயணத்திலிருக்கும் ஆச்சர்ய கேள்விகள் - விடை தெரியுமா உங்களுக்கு?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  20 Nov 2020 6:00 AM GMT

இந்து மரபின் புனித காப்பியங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம். இந்த இரு காப்பியங்களுடன் பல வாழ்வியல் தார்பரியங்கள் இணைந்துள்ளன. இதை படிக்கிற போது, நமக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் எழும். இதற்கான பதிலை ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வனுபவம் வழங்கும்.

அதனடிப்படையில், இராமாயணத்தில் எழும் சில புகழ்பெற்ற கேள்விகளும், அதற்கான விளக்கங்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன..

கிஸ்கிந்தை காண்டத்தில் எழும் கேள்வி இது, ஏன் இராமர் வாலியை மறைந்திருந்து வதம் செய்தார் என்பது. சாஸ்திரங்களின் படி, இளைய சகோதரரின் மனைவி மகளுக்கு ஒப்பானவர். யாரொருவர் தவறான எண்ணம் மற்றும் நோக்கத்தை கொண்டிருக்கிறாரோ அவர் தண்டிக்க படவேண்டும் என்பதே தர்மம். அதனடிப்படையில் வாலியின் இளைய சகோதரரான சுக்ரீவரினை வாலி சாம்ராஜ்ஜியத்தை விட்டு விரட்டியது மட்டுமல்லாமல் அவருடைய மனைவியையும் தன் வசம் வைத்து கொண்டார்.. இந்த தவறுக்கு தண்டனையாகவே ஶ்ரீ ராமர் மறைந்திருந்து வதம் செய்தார்.

சுயம்வரத்தில் ஶ்ரீராமரை ஏன் தேர்வு செய்தார் சீதை?

சீதை இளம் சிறுமியாக இருந்த போது யாராலும் உயர்த்த முடியாத வலிமை மிகு வில்லை சீதை எடுத்து விளையாடியதை கண்டு வியந்தார் பரசுராமர். அதன் பின் சீதையின் தந்தையான ஜனக மஹாராஜவிடம், சீதைக்கு திருமண வயது வரும் பொழுது, யாரொருவர் இந்த வில்லை உயர்த்துகிறாரோ அவருக்கே நீங்கள் சீதையை மணம் முடித்து கொடுக்க வேண்டும் என எடுத்துரைத்தார். அதன் படியே சுயம்வரத்தில், வில்லை எந்த சிரத்தையும் மிக லாவகமாக விஸ்வாமித்ரரின் ஆணைப்படி உயர்த்தினார் ஶ்ரீ ராமர். அந்த அசாதாரணமான வீரமே சீதை ஶ்ரீராமரை தேர்வு செய்ததற்கான காரணங்களுள் ஒன்று.

மந்தரைக்கும் ஶ்ரீராமருக்கும் இடையேயான பிரச்சனை என்ன?

இராமயாணத்தில் ஶ்ரீராமரின் தந்தை தசரத மஹாராஜா தனக்கு பின் ராமரை அரசராக்க முடிவு செய்திருந்தார். ஶ்ரீராமரின் ஜனன காரணம், அவர் காட்டிற்கு சென்று இராவணனை அழிக்க வேண்டும் என்பதே. எனவே இதனை நிறைவேற்ற அனைத்து தேவாதி தேவர்களும், சரஸ்வதி தேவியிடம் உதவியை நாடினார்கள். அதன் படியே மந்திரை கைகேயியை தூண்டி ராமனை வனவாசம் அனுப்பினார் என்பது புராணக்கதை.

பாலம் அமைக்கையில் நீரில் கல் மிதந்தது எப்படி?

ஶ்ரீராமரின் வானரப்படையில் நீலன் – நலன் என இரு வானரங்கள் இருந்தன. இவர்களுக்கு ரிஷி ஒருவர் ஒரு வரத்தை வழங்கியிருந்தார். அவ்வரத்தின் படி, அவர்கள் எந்த கல்லை தொட்டாலும் அவை நீரில் மிதக்கும் தன்மையை பெரும். இதை அறிந்த ஶ்ரீ ராமர், கடலில் விட்டெரியும் அனைத்து கற்களையும் அவ்விருவரையும் தொட்டு வீச கேட்டுக்கொண்டார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News