Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை நுழையும் முன் ஶ்ரீராமர் வணங்கிய ராமேஸ்வரத்தின் அதிசய விநாயகர் கோவில்.!

இலங்கை நுழையும் முன் ஶ்ரீராமர் வணங்கிய ராமேஸ்வரத்தின் அதிசய விநாயகர் கோவில்.!

இலங்கை நுழையும் முன் ஶ்ரீராமர் வணங்கிய ராமேஸ்வரத்தின் அதிசய விநாயகர் கோவில்.!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  17 Dec 2020 6:00 AM GMT

வெயில் உகந்த விநாயகர் திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவாதனை தாலுக்காவில் உள்ள தொண்டி என்ற இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது உப்பூர் சத்திரம் கிராமம். இந்த கிராமத்திற்கு லாவணப்புரம் என்ற பெயரும் உண்டு. சமஸ்கிருதத்தில் லாவண என்றால் உப்பு என்று பொருள்.

இது வரலாறு சிறப்புமிக்க கோவில் எனினும், தற்போதிருக்கும் கோவ்வில் 1905 ஆம் ஆண்டில் மன்னன் பாஸ்கர சேதுபதியால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவில் குறித்து பல வரலாற்று செய்திகள் கிடைக்கின்றன. இராமாயணத்தில், ராமன் இலங்கையை நோக்கி சென்ற போது இந்த கோவிலில் வழிபட்டு சென்றார் என்பது வரலாறு.

இந்த கோவிலுக்கு பல்வேறு நாமங்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். சூரிய தேவன் தன்னுடைய பாவங்கள் போக்க, இங்கே தவம் புரிந்து பல சித்திகளை பெற்றதால் இந்த இடத்தை சூரியபுரி என்றும், தவத்தால் பல சக்திகளை அவர் பெற்றதால் தவசித்திபுரம் என்றும், அவரடைய பாவத்திலிருந்து விமோச்சனம் பெற்றதால் பாவ விமோச்சனபுரம் என்றும், இந்த பகுதியில் ஏராளம்மான வன்னி மற்றும் மந்தாரை மரங்கள் இருப்பதால் வன்னிமந்தாரை புரம் என்றும் பலவித பெயர்கள் உண்டு.

தன்னுடைய பாவங்கள் போக்கி அருளியதை போலவே மக்களுக்கு ஆசிகளை அள்ளி வழங்க வேண்டும் என சூரிய பகவான் கேட்டு கொண்டதற்கு இணங்க கூரைகளின்றி அருள் பாலிக்கிறார்.

இந்த கோவிலின் அதிசயம் யாதெனில், சூரியவொளி நேரடியாக விநாயக பெருமான் மீது விழும் என்ற போதும், தக்‌ஷிணாயன காலமான ஜூலை-ஆகஸ்ட் முதல் டிசம்பர்- ஜனவரி வரையிலான ஆறு மாத காலமும சூரிய ஒளியில் விநாயக மூர்த்தியின் தென்புறத்திலும், உத்திராயண காலமான ஜனவரி- பிப்ரவரி முதல் ஜூன் – ஜூலை வரையிலான காலத்தில் வட புறத்திலும் விழுவதும் அற்புதமான நிகழ்வு. மேலும் சூரிய தேவன் எப்போது தன்னை வணங்க வேண்டும் என விரும்பினால் அவருடைய கதிரை தான் ஏற்பதாக வரமளித்ததால் அவரை வெயில் உகந்த பெருமான் என்றும் அழைக்கின்றனர்.

வாழ்வில் ஏற்படக்கூடிய தடைகள், கல்வி தடைகள், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளை தீர்ப்பவராக அருள் பாலிக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News