Kathir News
Begin typing your search above and press return to search.

ராவணன் வதைக்கப்பட காரணமாக இருந்த சாபங்கள்.. ஆச்சர்ய தகவல்கள்.!

ராவணன் வதைக்கப்பட காரணமாக இருந்த சாபங்கள்.. ஆச்சர்ய தகவல்கள்.!

ராவணன் வதைக்கப்பட காரணமாக இருந்த சாபங்கள்.. ஆச்சர்ய தகவல்கள்.!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  5 Dec 2020 5:45 AM GMT

ராவணன் ஶ்ரீ ராமரால் வதம் செய்யப்பட்ட விஷயம் அனைவரும் அறிந்ததே. ராவணன் மரணத்திற்கு காரணமாக இருந்தது அவன் பெற்ற நூற்றுக்கணக்கான சாபங்கள். அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் பல்வேறு சூழல்களில் பல்வேறு மனிதர்கள் அவன் பெற்ற சாபமே ஒரு மையபுள்ளியில் இணைந்து அவனுடைய மரணத்திற்கு காரணமாக அமைந்தது.

அதில் ஒரு சில இங்கே. ரகுவன்ஷ பரம்பரையில் ஒரு வீரமிக்க அரசன் அனர்னேய் என்ற பெயரில் இருந்தான். ராவணன் உலகிலிருக்கும் நாடுகளை கைப்பற்றும் ஆவலுடன் களம் இறங்கிய போது அவன் அனர்னேயையுடன் போரிடும் சூழல் ஏற்பட்டது. ராவணனை அவனால் வெல்ல முடியாமல் போனாலும் கூட இறக்கும் தருவாயில் ராவணனுக்கு சாபமளித்து மரணித்தான்.

மற்றொரு முறை கைலாசா மலையில் சிவபெருமானை தரிசிக்க சென்றான் ராவணன். அப்போது அங்கு வாயிலில் இருந்த நந்தி தேவனை கண்டு எள்ளல் செய்தான் ராவணன். நந்தி தேவர் மற்ற நந்திகளை போல சாதரணமானவர் அல்ல. மாபெரும் சக்திகள், வல்லமைகள் பொருந்தியவர், தன்னை ஏளனம் செய்த காரணத்தால் அவரை சபித்தார்.

ஒரு முறை தன்னுடைய புஷ்பரக விமானத்தில் ராவணன் பயணித்த வாறு இருந்தான். அப்போது பூமியில் மஹா விஷ்ணுவை வழிபட்டவாறு இருந்த பெண்ணை தீண்ட முனைந்த போது அந்த பெண் சாபமளித்து அந்த இடத்திலேயே உயிர் துறந்தார்.

உலகையே வெல்லும் இச்சை கொண்டிருந்ததால் பூமிக்கு அடுத்து தேவலோகம் சென்றான் ராவணன் அங்கே அப்சரஸ் எனும் ரம்பையை தீண்ட முனைந்த போது, ரம்பை ராவணனின் தம்பியான குபேரின் மகன் நலகுபேரரை மணக்கயிருப்பதாக தெரிவித்தாள். ஆனாலும் வரம்பு மீறிய போது, இதை அறிந்த நல குபேரரும் சாபமளித்தார்.

சாபங்களை கடந்து பலரும் ராவணனை எச்சரிந்திருந்தனர். ஶ்ரீ ராமரை எதிர்பது அவருடைய உயிருக்கு பாதகமாக அமையும் என பலர் சொல்லியும் அவரால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. அவ்வாறு எச்சரித்தவர்கள் அவருடைய சபையின் மூத்தவரான மலையவன் , பின் ராமனால் வதம் செய்யப்பட்ட மரீச்சன், தம்பி விபீஷணன், மனைவி மண்டோதரி, ஹனுமன், சீதா தேவி என அவனை எச்சரித்தவர்கள் பலர், அவன் பெற்ற சாபத்தின் தாக்கத்தால் எந்த எச்சரிக்கைக்கும் செவி சாய்க்காமல், ஶ்ரீ ராமரால் வதம் செய்யப்பட்டான் ராவணன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News