Kathir News
Begin typing your search above and press return to search.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய தெய்வம் 'திருவிடைக்கழி குமரன்'

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிட திருவிடைக்கழி முருகன் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய தெய்வம் திருவிடைக்கழி குமரன்
X

KarthigaBy : Karthiga

  |  19 Nov 2023 4:52 PM IST

தன் பக்தனான மார்க்கண்டேயனை 'என்றும் 16 'வயதில் இருக்க ஈசன் அருளிய தலம் திருக்கடையூர். இந்த ஆலயத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவிடைக்கழி என்ற திருத்தலம். இங்குள்ள குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான் முருகப் பெருமானை வழிபட்டு பேறு பெற்றார் என்கிறது தலபுராணம் .


இந்த ஆலயத்தில் உள்ள சோமாஸ் ஸ்கந்தர், சந்திரசேகர், நடராஜர், பிரதோஷ விநாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து வடிவங்களும் முருக பெருமானாகவே காட்சியளிப்பது ஆலயத்தின் தனி சிறப்பாகும். தேவயானைக்கு இந்த ஆலயத்தில் தனி சன்னதி இருக்கிறது. தாயாருக்கு அருகில் முருகப்பெருமானின் 'குஞ்சரி ரஞ்சித குமரன்' என்ற இறைவனை வைத்துள்ளனர். முருகப் பெருமானை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News