Kathir News
Begin typing your search above and press return to search.

குபேர சிலையை பூஜை அறையில் வைக்க வேண்டிய திசை - தவறாக கூட இந்த திசையில் வைத்து விடாதீர்கள்!

செல்வ வளம் பெருக வீட்டில் குபேரர் சிலையை பூஜை அறையில் வைக்க வேண்டிய திசை பற்றி காண்போம்.

குபேர சிலையை பூஜை அறையில் வைக்க வேண்டிய திசை - தவறாக கூட இந்த திசையில் வைத்து விடாதீர்கள்!

KarthigaBy : Karthiga

  |  20 Feb 2024 2:07 AM GMT

வீடுகளில் கடைகளில் அலுவலகங்களில் என பல இடங்களில் பல வகையான குபேரர் சிலையை நாம் பார்த்திருப்போம். குபேரர் சிலையை வீட்டில் வைத்திருந்தாலோ அல்லது குபேர எந்திரத்தை வைத்து வழிபட்டாலோ வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும் என்பது ஐதீகம். வீட்டில் என்றென்றும் செல்வம் பெருகி இருக்கவும், மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செல்வத்திற்கு அதிபதியான குபேரர் சிலை வைப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது .


ஆன்மீக ரீதியாகவும் வாஸ்து ரீதியாகவும் குபேரர் சிலை வீட்டிற்கு மகிழ்ச்சி, செல்வம் ஆகியவற்றை கொடுப்பதாக கருதப்படுகிறது. வீட்டில் வைத்து வழிபடுவது நன்மை தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 72 என்ற எண்ணிக்கையிலான கட்டங்களை கொண்ட எந்திரத்தை வீட்டின் வட திசையில் வைப்பது நல்லது என கூறப்பட்டுள்ளது. குபேர சிலை செல்வத்தை வழங்க மட்டுமல்ல பலவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் என்பது ஐதீகம் .வாஸ்து சாஸ்திரத்தில் எந்த விதமான பொருளையும் வைக்க எந்த திசை சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது. அதனை மீறும் போது பலன் கிடைக்காததோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் அதன் காரணமாக பிரச்சனைகளை கூட சந்திக்க நேரிடும்.


குபேரர் சிலையை வீட்டில் தெற்கு திசையில் வைத்தால் அதன் மூலம் கெடுதலானன பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதைப்போன்று குபேரர் சிலையை வீட்டின் மேற்கு திசையை பார்த்த வாரும் வைக்கக்கூடாது .ஏனெனில் மேற்கு திசை சனிபகவானுக்குரிய திசையாக கருதப்படுகிறது. இந்த திசையில் குபேர சில இருந்தாலும் உடனடியாக அதை அகற்றி விடவும் .தெற்கு திசை மேற்கு திசையை போன்று தென்மேற்கு திசையும் குபேர சிலைக்கு உகந்த திசை அல்ல .இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவும் .எனவே வாஸ்து சாஸ்திரப்படி குபேர சிலைக்கு மிகவும் உகந்த வடக்கு திசையில் வைத்தால் வீட்டில் என்றென்றும் செல்வம் நிறைந்திருக்கும் .அதேபோல் கிழக்கு திசையும் குபேரர் சிலைக்கு ஏற்ற திசை ஒன்று குபேரர் சிலையை வடக்கு முகம் பார்த்தவாறு வைக்க வேண்டும் .அல்லது கிழக்கு முகம் பார்த்தவாறு வைக்க வேண்டும்.


முதுகில் தங்க நாணயங்கள் செல்வங்களை மூட்டையாக சுமந்தபடி இருக்கும் குபேரர் சிலை தான் செல்வ வளர்ச்சி அடையலாம் ஆகும். செல்வம் பெருக இதனை வைப்பது சிறப்பு. நீங்கள் வேலை செய்யும் இடங்களிலும் இதனை வைக்கலாம். இதனால் வாழ்க்கையில் நிலையான வளர்ச்சி ஏற்பட்டு செல்வ வளம் பெருகும். அதேபோன்று தங்க நிற முலாம் பூசப்பட்ட குபேரர் சிலையும் செல்வ வளத்தை குறிக்கிறது .வீட்டில் என்றென்றும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் தங்க நிறத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் குபேரர் சிலையை வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News