Kathir News
Begin typing your search above and press return to search.

கேதார கௌரி விரதத்தின் மகிமையும் பலன்களும்!

அம்பாளையும் பரமேஸ்வரனையும் வழிபடுவதற்கு பல்வேறு விரதங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் கேதார கௌரி விரதம்.

கேதார கௌரி விரதத்தின் மகிமையும் பலன்களும்!
X

KarthigaBy : Karthiga

  |  5 Nov 2023 10:15 AM GMT

கணவனும், மனைவியும் குடும்பத்தில் கருத்தொருமித்து செயல்பட்டு இன்பமாக வாழ வேண்டும் என்பதே இவ்விரதத்தின் உட்கருத்து. வழிபாட்டுக்குப் பிறகு 21 நூல்கள் சேர்ந்த முடிச்சு உள்ள பட்டு அல்லது மஞ்சள் சரட்டை கையில் அணிந்து கொள்ள வேண்டும். கேதார கௌரி விரதத்தை 21 முறைகள் தவறாமல் பயபக்தியுடன் அனுஷ்டித்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் பெருகும். வாழ்க்கையில் உள்ள அனைத்து இன்னல்களும் நீங்கும். கணவன் மனைவி மன ஒற்றுமையும் அந்நியோன்யமுமம் அதிகரிக்கும்.


வீட்டில் உள்ள குழப்பங்கள் யாவும் தீரும். நன்மைகள் பெருகும். சகல் சம்பத்துக்களும் பெருகும். தன தானியம், பால் ,பணம் ஆகிய அனைத்து வகையான சுபிக்ஷங்களும் பெருகும். அந்த பரமேஸ்வரன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பரமேஸ்வரியுடன் காட்சி தருவார். இவ்வாறு கேதார கௌரி விரதத்தின் மகிமையை கௌதம முனிவர் எடுத்துரைத்துள்ளார். ஐப்பசி மாத சுக்கிலபட்ச அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் வரும். அதற்கு முன்னர் 21 நாட்கள் பூஜை செய்து வணங்க வேண்டும் . அவ்வாறு இயலாதவர்கள் அந்த விரத நாளில் மட்டுமாவது முறையாக விரதம் இருந்து வழிபட வேண்டும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News