Kathir News
Begin typing your search above and press return to search.

சுதர்சன சக்கரத்தின் மகிமை!

மகாவிஷ்ணுவின் கைகளில் இருக்கும் சுதர்சன சக்கரத்திற்கென்று ஒரு தனியான மகிமை உண்டு. அதைப் பற்றி காண்போம்.

சுதர்சன சக்கரத்தின் மகிமை!

KarthigaBy : Karthiga

  |  22 Sep 2023 2:30 PM GMT

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது. அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சுதர்சன் என்றால் 'மங்களகரமானது' என்று பொருள். சக்கர என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று பொருள். எல்லா ஆயுதங்களை காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது. சாதாரணமாக சுதர்சன சக்கரம் கிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். ஆனால் விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும் ஆள்காட்டி விரலில் இருந்துதான் ஏவுகிறார். எதிரிகளை அழித்த பின் சுதர்சன சக்கரம் மறுபடியும் அதன் இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவிவிட்டவரின் கட்டளைக்கு அது கீழ்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.

ஏதாவது தடை எதிர்ப்பட்டால் சுதர்சன சக்கரத்தின் வேகம் அதிகரிக்கிறது. சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை . அதனுடைய உருவம் வடிவம் எத்தகையது என்றால் சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது . அதே சமயம் இப் பிரபஞ்சம் அளவு பறந்து விரிந்தது. இத்தனை பெருமைகளுக்கு உரியது மகாவிஷ்ணுவின் கைகளில் இருக்கும் சுதர்சன சக்கரம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News