Kathir News
Begin typing your search above and press return to search.

பெரிய கார்த்திகை என்று அழைக்கப்படும் திருக்கார்த்திகை திருநாள் விரதத்தின் மகிமை!

முருகனுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படும் திருக்கார்த்திகை திருநாள் விரதத்தின் பலன்கள் பற்றி காண்போம்.

பெரிய கார்த்திகை என்று அழைக்கப்படும் திருக்கார்த்திகை திருநாள் விரதத்தின் மகிமை!

KarthigaBy : Karthiga

  |  6 Nov 2023 8:15 AM GMT

"சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தேய்வமும் இல்லை என்பார்கள். அந்த முருக பெருமானை வழிபட உகந்த நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம் ஆகும். கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு மிகப்பெரிய பெருமை உண்டு. நட்சத்திரத்தின் பெயரும் மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் கை என்ற எழுத்தில் முடியும் மாதம் இது. வாழ்க்கை சிறப்பாக இருக்க நம்பிக்கை வைக்க வேண்டிய மாதம் கார்த்திகை மாதமாகும்.


ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை தான் திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும் அடைமொழி சுட்டி அழைக்கின்றனர். ஊர்களுக்கு திரு என்று அடைமொழி சேர்த்து இருப்பதை பார்த்திருப்பீர்கள். திருமையம், திருப்பத்தூர், திருவாடானை, திருவாவடுதுறை, திருவாரூர், திருப்புங்கூர் போன்ற எண்ணற்ற தளங்கள் திரு என்று அடைமொழியுடன் இருப்பதை காணலாம்.


சிறப்பான ஸ்தலங்கள் அமைந்த ஊர்களின் பெயர்களுக்கு திரு என்று அடைமொழி சேர்ந்திருப்பது போல நட்சத்திரத்திற்கு திரு என்று சேர்த்து கொண்டாடப்படுவது கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகைக்கு மட்டும்தான். கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கொண்ட வேலன் வெற்றி களிப்போடு இருக்கும் மாதம் இது. இம்மாதத்தில் பிறந்தவ ஆண் குழந்தைகளுக்கு 'கார்த்திகேயன்' என்ற பெயர் வைப்பதும் பெண் குழந்தைகளுக்கு 'கார்த்திகா' என பெயர் வைப்பதும் வழக்கம்.


கந்தன் பெயரைச் சூட்டினால் எந்த நாளும் இனிய நாளாக அமையும். அப்படிப்பட்ட பெருமைக்குரிய திருக்கார்த்திகை அன்று பெரியசாமி, வேலுச்சாமி, கந்தசாமி என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய ஆறுமுகசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு விரதமும் இருந்து வழிபட்டால் அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கை வழங்குவார் என்பது நம்பிக்கை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News