Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலையின் மகிமை!

பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மலையின் மகிமையை பற்றி காண்போம்.

திருவண்ணாமலையின் மகிமை!
X

KarthigaBy : Karthiga

  |  23 Nov 2023 11:00 AM GMT

'அருணன்' என்றால் 'சூரியன்' என்று பொருள் .'அசலம்' என்றால் 'கிரி' அல்லது 'மலை' என்று பொருள். சூரியன் போன்ற ஒளி வடிவாக இறைவன் மலையுருவில் காட்சியளிப்பதால் இந்த மலை அருணாசலம் என்று அழைக்கப்படுகிறது. கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும் , திரேதாயுகத்தில் மாணிக்கம் மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும் இருந்த இந்த மலை கலியுகத்தில் கல்முனையாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.


இந்திரலிங்கம் ,அக்னி லிங்கம், எமலிங்கம் ,நிருதிலிங்கம் , வருணலிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் திருவண்ணாமலையை சுற்றி எட்டு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களின் சன்னதியில் வழிபாடு செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News