Kathir News
Begin typing your search above and press return to search.

வேண்டும் வரம் அருளும் கன்னியாக்குறிச்சி வடிவழகி அம்மன்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கன்னியாகுறிச்சி வடிவழகி அம்மன் கோவில் 211 வது ஆண்டு மகா உற்சவம் நடந்து வருகிறது.

வேண்டும் வரம் அருளும் கன்னியாக்குறிச்சி வடிவழகி அம்மன்!

KarthigaBy : Karthiga

  |  5 May 2024 6:46 AM GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலும் பட்டுக்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் முத்துப்பேட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் கன்னியாகுறிச்சி வடிவழகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் கன்னியாகுறிச்சி வடிவழகி அம்மன் கோவிலுக்கு திருவாரூர், தஞ்சாவூர் ,நாகை மாவட்டம், வேதாரணியம் ,மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள்.

கோவிலின் உள்ளே சென்றதும் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை நினைவூட்டு வகையில் அமைப்புடன் உள்ளது .பிரம்மாண்டமான உருளை வடிவில் உயரம் குறைவான தூண்களும் முன் மண்டபமும் அர்த்தமண்டபமும் சன்னதியெல்லாம் அம்மனின் அருள் நிரம்பும் நிலையை உணர்த்துகிறது .அம்மன் வடிவழகி பேரொளியாக திகழ்கிறாள். கன்னி பெண்ணான வடிவாம்பாள் தனக்கு அம்மை நோய் கண்டபோது உறவினர்களை அழைத்து நான் மகமாயி உடன் செல்ல போகிறேன். அவரிடம் இருந்து எல்லாருக்கும் எல்லா நன்மைகளும் பெற்று தருவேன் என கூறி கண்ணை மூடினாள் வடிவாம்பாள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து 15 நாட்களுக்கு பிறகு வேப்பமரம் ஒன்று முளைக்க தொடங்கியது அது பெரிய மரமாக ஆலவிருட்சமான காலகட்டத்தில் தன் சகோதரனின் மூலம் வடிவாம் பால் கனவில் தோன்றி அருள்வாக்கு சொல்ல தொடங்கினாள். அவனது வாக்குப்படி மக்களின் வேண்டுதலையும் அம்பாள் நிறைவேற்றி வைத்தார். இந்த அம்மனின் மகிமை கேட்ட மக்கள் முகப்பரு, அம்மை, சூட்டு கொப்பளம் கட்டி போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ,வயிற்றுவலி நீங்க வழிபடுகிறார்கள். குழந்தை வரம் வேண்டி வருபவர்க்கு வரம் தருகிறாள். இந்த கோவிலில் பிரசாதமாக ஒரு வகை எண்ணெய் தருகிறார்கள் .இந்த எண்ணெயை தடவினால் கட்டிகள் மருக்கள் உடனடியாக குணமாகிவிடும். அம்மனின் அபிஷேக பாலை அருந்தினால் அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News