Kathir News
Begin typing your search above and press return to search.

மகா சிவராத்திரி தோன்றிய வரலாறும் விரதம் இருக்கும் முறையும்

மகா சிவராத்திரி தோன்றிய கதையும் வரலாறும் பல்வேறு விதமாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. அவற்றில் சிலவற்றை காண்போம்.

மகா சிவராத்திரி தோன்றிய வரலாறும் விரதம் இருக்கும் முறையும்
X

KarthigaBy : Karthiga

  |  17 Feb 2023 12:15 PM GMT

சிவலிங்கத்தின் புராணக்கதை மகா சிவராத்திரியுடன் ஆழமாக தொடர்புடையது. மஹா சிவராத்திரி நாளில் தான் சிவன் முதலில் ஒரு லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. அப்போதிருந்து, இந்த நாள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது மற்றும் சிவாவின் மகத்தான இரவு மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்நாளை கொண்டாட, சிவபெருமானின் பக்தர்கள் பகலில்விரதம் இருந்து இரவு முழுவதும் இறைவனை வணங்குகிறார்கள். சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவது ஒருவருக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருகிறது என்று கூறப்படுகிறது. எனவே இன்று இரவு சிவனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று நான்கு கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறும்.


சிவராத்திரி நாளில ஒரு காட்டில் பல பறவைகளை கொன்ற வேட்டைக்காரன் ஒருவனை பசியுள்ள சிங்கம் ஒன்று துரத்தி சென்றுள்ளது. சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேட்டைக்காரர் வில்வ மரத்தில் ஏறினார். சிங்கம் மரத்தின் அடிப்பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தது. மரத்திலிருந்து தூக்கத்தில் விழுவதைத் தவிர்ப்பதற்காக விழித்திருக்க வேட்டைக்காரர் வில்வ மரத்தின் இலைகளை பறித்து கீழே இறக்கி போட்டு கொண்டே இருந்தார். அப்போது மரத்தின் அடிப்பகுதியில் அமைந்திருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது இலைகள் விழுந்தன. வில்வ இலைகளை வழங்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த சிவன், பறவைகளை கொல்வதன் மூலம் வேட்டைக்காரன் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து வேட்டைக்காரனைக் காப்பாற்றினார். இந்த கதை சிவராத்திரியில் வில்வ இலைகளுடன் சிவனை வழிபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.


தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார்.உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது.


பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். இதனால் இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் மற்றும் தேவர்களும் அமைதி பெற வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர்.அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News