ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் தாய்லாந்து நாட்டில் உள்ள புனித நகரம்!
அயோத்தியை போற்றி தாய்லாந்து நாட்டிலும் ஒரு புனித நகரம் உள்ளது அங்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறதுop
By : Karthiga
இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு முறைகளை உலகின் பல்வேறு நாடுகள் கடைபிடித்து வருகின்றன. பல நாடுகளில் இந்து கடவுள்களின் கோவில்கள் உள்ளன. குறிப்பாக கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட் கோவிலை எடுத்துக்காட்டாக கூறலாம். அதுபோல் தாய்லாந்து நாட்டிலும் இந்திய கலாச்சாரம் பரவியுள்ளது. இங்குள்ள ஒரு நகரத்தின் பெயர் இந்தியாவின் அயோத்தியை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. அதன் பெயர் அயுத் தாயா.
தாய்லாந்து தலைநகரம் பாங்காங் நகரில் இருந்து வடக்கே எழுவது கிலோ மீட்டர் தொலைவில் சாவ்பிரியா நதிக்கரையில் அமைந்துள்ள பழங்கால நகரம் தான் அயுத்தாயா. பெயரில் மட்டுமல்ல ராமர் வழிபாட்டிலும் நம்பிக்கை உள்ள நகரமாகவும் திகழ்கிறது. அயுத்தாயா நகரம் பற்றி உலக இந்து அறக்கட்டளையின் நிறுவனரும் உலகளாவிய தலைவருமான சுவாமி விக்யானந்த் கூறுகையில் ராமனின் பிறந்த இடமான அயோத்திய நினைவாக அயுத்தாயா பெயரிடப்பட்டுள்ளது. அயுத்தாயாவின் முதல் மன்னரான ராமதிபோடி ராமாயணத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நகரத்திற்கு அழுத்தாயா என்று பெயரிட்டார்.
அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த சக்ரி வம்ச மன்னர்கள் தங்களது பெயருடன் ராமர் என்ற பெயருடன் ஏற்றுக்கொண்டனர் என்றார். இத்தகைய வரலாற்று சிறப்பும் புனிதமாகவும் கருதப்படும் அயுத்தாயா நகரத்தைச் சேர்ந்த மக்களும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
ஆயுத்தாயா மட்டுமல்ல தாய்லாந்தின் பிற முக்கிய நகரங்களிலும் உள்ள இந்து கோவில்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று மண் விளக்குகள் ஏற்றப்படும் என்றும் ராமாயணம் தொடர்பான பாடல்கள் பாடப்படும் என்றும் கும்பாபிஷேக விழாவை நேரடியாக காணும் வகையில் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்படும் என்றும் பாங்காங் நகரைச் சேர்ந்த விசுவ இந்து பரிஷ உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஆயுத்தாயாவில் இருந்து புனித மண்ணையும் தாய்லாந்து நாட்டில் உள்ள சாவ் பிரயா, லோகுபுரி மற்றும் பாசாக் ஆகிய மூன்று நதிகளில் இருந்து புனித நீரையும் ராமர் கோவிலுக்கு கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் தெரிவித்தார்.
SOURCE :DAILY THANTHI