Kathir News
Begin typing your search above and press return to search.

சந்திரனின் வளர்பிறை தேய்பிறை உருவான புராணக்கதை

ஆன்மீகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு புராணக் கதை உண்டு அதன்படி சந்திரன் வளர்வதற்கும் தேய்வதற்கும் ஒரு கதை கூறப்படுகிறது. அதைப்பற்றி காண்போம்.

சந்திரனின் வளர்பிறை தேய்பிறை உருவான புராணக்கதை
X

KarthigaBy : Karthiga

  |  21 Feb 2023 9:30 AM GMT

தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்தான். அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான்.


இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான். சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை-வளர்பிறை உருவானது.


தேய்பிறை காலங்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகளையும் பலரும் தவிர்ப்பார்கள். அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும் அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இந்நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் அதில் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News