தீபாவளியன்று தோண்டி எடுக்கப்பட்ட பழமையான சிவலிங்கம்.!
தீபாவளியன்று தோண்டி எடுக்கப்பட்ட பழமையான சிவலிங்கம்.!
By : Saffron Mom
தீபாவளி அன்று ஒரிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் ஒரு சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு திறந்தவெளி மைதானத்தில் பூங்கா கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது டிராக்டர் மூலம் மண்ணைத் தோண்டி கொண்டிருந்தனர். தோண்டும் பொழுது ஒரு பாறையில் இடிப்பது போல் தெரிந்தவுடன் நிறுத்தினர். இடித்த வேகத்தில் இயந்திரம் பாதிப்படைந்தது.
Came across this news of an ancient Shivling being discovered during the excavation for a park project in Bhadrak district.
— Nila Madhab PANDA ନୀଳମାଧବ ପଣ୍ଡା (@nilamadhabpanda) November 16, 2020
I believe every single village in India is blessed with rich traditions and history. pic.twitter.com/CPXI2o3ISV
தொழிலாளர்கள் அது ஒரு பாறை என்று நினைத்த பொழுது, அது ஒரு சிவலிங்கம் எனக் கண்டறிந்தனர். மேலும் பல கலைப்பொருட்கள் அந்த இடத்தில் காணப்பட்டன. தொழிலாளர்கள் உடனடியாக உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
சிவலிங்கம் பற்றிய தகவல்கள் அருகில் உள்ள கிராமங்களை விரைவாக அடைந்தது. அப்பொழுது உள்ளூர்வாசிகள் நிறைய பேர் அந்த இடத்திற்கு வந்து சிவலிங்கத்திற்கு பிரார்த்தனை செய்தனர். இது பழமையான சிவலிங்கம் என்று தெரிந்தாலும் எத்தனை ஆண்டுகாலம் பழமையானது என்று இன்னும் வல்லுநர்கள் சோதிக்கவில்லை
அம்மாவாசை அன்று சிவலிங்கத்தை கண்டறிவது புனிதமானது என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள் ஒரிசா போஸ்டில் வெளியாகியுள்ள செய்திகளில், சில கிராமவாசிகள், "நேற்று அமாவாசை அத்தகைய ஒரு நல்ல நாளில் பெரிய சிவலிங்கம் கண்டறியப்பட்டது ஆண்டவரின் ஆசீர்வதித்த்தைத் தவிர வேறொன்றுமில்லை" என்று கருதுகின்றனர்.