Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே மலை.. உலகையே வியக்க வைக்கும் ஆயிரமாண்டு அதிசயம்! உலகின் பழமையான கைலாசா கோவில்.!

ஒரே மலை.. உலகையே வியக்க வைக்கும் ஆயிரமாண்டு அதிசயம்! உலகின் பழமையான கைலாசா கோவில்.!

ஒரே மலை.. உலகையே வியக்க வைக்கும் ஆயிரமாண்டு அதிசயம்! உலகின் பழமையான கைலாசா கோவில்.!
X

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  5 Dec 2020 11:15 AM IST

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா பகுதியில் அவுரங்காபாத் எனும் இடத்தில் அமைந்துள்ளது எல்லோரா குகை. உலகின் அனைத்து திசைகளிலுமிருந்து சுற்றுலா வாசிகளை சுண்டி இழுக்கும் அழகும், ரம்மியமும் கொண்ட இடம். உலகின் மிக பழமையான குடவரை கோவில் இது. 760 இல் ராஷ்ட்ரகுட சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் கிருஷ்ணர் என்ற மாமன்னனால் கட்டப்பட்டது.

இந்த மொத்த கோவிலும் ஒரே மலையை குடைந்து கட்டப்பட்டது என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். எல்லோரா எனும் கிராமத்தில் சரநந்திரி எனும் மலையை ஒரே ஒரு மலையை குடைந்து கைலாசா எனும் கோவிலை உருவாக்கியுள்ளனர்.

இமய மலையில் இருக்கும் கைலாசா நாதரின் பிம்பத்தை பிரதிபலிப்பதற்காக இந்த கைலாசா கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை இன்றும் சற்று ஆய்வுபூர்வமாக ஆராய்ந்து பார்த்தால், கட்டிட கலைஞர்கள் இந்த குடவரை கோவிலுக்கு ஆதியில் ஒரு வெள்ளை நிற பூச்சை பூசியுள்ளனர். இதன் மூலம் இந்த இடம் பார்பதற்கு கைலாசத்தை பிரதிபலிக்கும் என எண்ணியுள்ளனர்.

உலகிலேயே மிக பழமையான ஒற்றை பாறையை குடைந்து கட்டப்பட்ட மிக பிரமாண்டமான பல அடுக்கு கொண்ட கோவில் இதுவே. தொல்லியல் ஆய்வின் போது மேற்கத்திய ஆய்வாளர்கள் எல்லாம் இதன் பிரமாண்டத்தை வியந்துள்ளனர் காரணம் இது ஏதென்ஸில் இருக்கும் பார்த்தினன் பகுதியை விட மிக பெரியது.

இந்த கோவிலின் மர்மம் என்னவெனில், இந்த கோவில் எப்போது உருவாக்கப்பட்டது என்ற துல்லியமான காலத்தை யாராலும் கணிக்க முடியவில்லை என்பதே. இந்த கோவிலின் தூணிலும் கலை நயம் பொங்கி வழிகிறது. மலையின் உச்சியிலிருந்து பார்க்கிற போது இக்கோவிலின் மிரட்டும் பிரமாண்டம் நம்மை பெருவியப்பில் ஆழ்த்துகிறது. குறிப்பாக ராவணன், இந்த மொத்த கைலாசா கோவிலையும் உயர்த்துவது போன்ற காட்சியமைப்பு கண்களுக்கு விருந்தாகும். இன்று இருக்கும் கட்டிட நிபுணர்கள் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் கூட இத்தனை துல்லியமான ஒரு கோவிலை அது மேலிருந்து கீழாக வடிவமைக்க முடியாது என்றே சொல்கின்றனர்.

இந்த கோவிலுக்குள் ஐந்து சிறு கோவில்களும் உண்டு அதில் மூன்று புனித நதியான கங்கா, யமுனா சரஸ்வதிக்கு அர்பணிக்கப்படுள்ளது. இதிகாச காட்சிகள், மிக அழகிய சிற்பங்கள் ஒரு நாள் அல்லது ஒரு முறை மட்டுமே செய்யும் பயணம் இதன் மொத்த அழகை கண்டு ரசிக்க போதாது. இந்திய கட்டிடக்கலையின் உச்சம் இக்கோவில்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News