Kathir News
Begin typing your search above and press return to search.

பாதாள சனீஸ்வரர் அமைந்த திருத்தலம்

அருள்மிகு சௌந்தரநாயகி பரிமள சுகந்த நாயகி சமேத சோழீஸ்வரர் திருக்கோயிலில் பாதாள சனீஸ்வரர் காட்சி தருகிறார்.

பாதாள சனீஸ்வரர் அமைந்த திருத்தலம்
X

KarthigaBy : Karthiga

  |  9 Sept 2023 4:00 PM IST

சனி பகவான் சுயம்பு மூர்த்தியாக பாதாளத்தில் இருந்து தோன்றி வழிபட்ட தலம் குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் சனி பகவான் கையில் அமிர்த கலசத்தோடு இருப்பது சிறப்பாகும். சித்தர்களும், முனிவர்களும் தவம் மேற்கொண்டு இங்கு இறைவனை வழிபட்டனர். சனிபகவான் அவர்களை வரவேற்கும் வண்ணம் நிராயுதபாணியாக கைகூப்பி நிற்பது மிகவும் அருமையான காட்சி.


ஒரு காலத்தில் சனிபகவானை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்காக பள்ளம் தோண்டும்போது அந்த திருவுருவத்தின் அடிப்பகுதி தென்படவில்லை. சுமார் 15 அடி தோண்டியும் பீடம் பிடிபடவில்லை. எனவே அப்படியே விட்டு விட்டார்களாம். அதனால் இந்த திருத்தலத்தில் பாதாள சனீஸ்வரராக காட்சி தருகிறார். இத்தளத்தில் வந்து சனீஸ்வர பகவானை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News