பராசக்தியின் வியர்வை துளியே வில்வம் என்கிறது ஸ்கந்த புராணம் - ஆச்சர்ய தகவல்!
பராசக்தியின் வியர்வை துளியே வில்வம் என்கிறது ஸ்கந்த புராணம் - ஆச்சர்ய தகவல்!

வில்வம் என்பது சிவபெருமானின் அடையாளம். முழுமையான அர்பணிப்பு உணர்வுடன், தூய்மையான பக்தியுடன் ஒருவர் இறைவனுக்கு வில்வத்தை அர்பணித்து வணங்கினால் அவர் வேண்டிய வரங்களை சிவபெருமான் அளிப்பார் என்பது நம்பிக்கை. ஸ்கந்த புராணத்தின் அடிப்படையில் வில்வ மரம் என்பது அன்னை பராசக்தியின் வியர்வையில் ஒரு துளி என கருதப்படுகிறது. அன்னையின் வியர்வையில் ஒரு துளி மந்த்ராச்சல் மலையில் விழுந்து வில்வமானது. எனவே வில்வம் என்பதே அன்னையின் சொரூபம்.
வில்வம் குறித்து சொல்லப்படும் தத்துவம் யாதெனில், அன்னை பராசக்தி இந்த மரத்தின் வேரதில் கிரிஜா என்ற நாமத்துடனும், அதன் மரத்தின் தண்டில் மஹேஸ்வரி என்ற நாமத்துடனும், தாக்ஷாயினியாக கிளைகளிலும், பார்வதி தேவியாக இலைகளிலும், காத்யாயினியாக கனிகளிலும், கெளரி தேவியாக மலர்களிலும் குடி கொண்டிருக்கிறார். மேலும் இந்த மரத்தில், இலட்சுமி தேவியும் வாசம் செய்கிறார். பார்வதியின் பலவிதமான தன்மை இந்த மரத்தில் நிறைந்திருப்பதாலும் இந்த மரம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இதன் புனிதத்தன்மை எப்படி பட்டது எனில், யாரொருவர் இந்த வில்வ மரத்தையோ அல்லது இலையையோ தொடுகிறாரோ அவர்களின் பாவம் அனைத்தும் கரைந்து போய்விடும் என்பது நம்பிக்கை.
ஆன்மீக ரீதியாக புனிதத்துவம் நிறைந்த அதே வேளையில் வில்வத்திற்கு மிக அரிதான மருத்துவ குணங்களும் உண்டு. மருத்துவ ரீதியாக அதன் மூன்று இலை வடிவம் இவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது. சாத்வீகம், ரஜோ குணம், தாமசம். மேலும் இந்த இலையில் நேர்மறை ஆற்றலை ஈர்க்க கூடிய அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனுடைய வேர், இலை, பூ என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிரம்பியதாக இருக்கிறது. ஈர்களில் இரத்த கசிவை கட்டுப்படுத்த, ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, இரத்தமின்மை போன்றவற்றை குணப்படுத்துவதில் வில்வம் பயன்படுத்தப்படுகிறது.
உடலில் உள்ள அமில சுரப்பில் சமநிலையின்மை நிலவுகிற போது ஏற்படும் அல்சர் போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும் இந்த இலை உதவுகிறது.
நன்றி : ஸ்பீக்கிங் ட்ரீ