Kathir News
Begin typing your search above and press return to search.

வெள்ளத்தால் மறைக்கப்பட்ட கோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

வெள்ளத்தால் மறைக்கப்பட்ட கோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

வெள்ளத்தால் மறைக்கப்பட்ட கோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!
X

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  15 Feb 2021 7:43 AM GMT

இந்தியாவில் உள்ள புராதான சின்னங்களுள் முக்கியமானது இந்த கோவில். காரணம் இந்த கோவிலை உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்த கோவிலை கட்டியவர் சந்தேல மன்னன். இந்த கோவிலின் பெயர் காந்தாரியா மஹாதேவர் கோவில். காந்தரிய என்பதற்கு சமஸ்கிருதத்தில் மேன்மைமிகு என்று பொருள். மற்றும் மேன்மை மிகு குகை எனவும் பொருள். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது சத்தர்பூர் மாவட்டம். இங்கு இருக்கும் கஜூராஹோ எனும் இடம் ஆயிரமாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இங்கு அமைதிருப்பது தான் காந்தாரியா மஹாதேவர் கோவில். இந்த கோவில் சந்தேலர்களின் ஆட்சி மிக தீவிரமாக இருந்த காலத்தில் 950 ஆம் ஆண்டு முதல் 1150 ஆண்டு வரையிலான கால கட்டம் வரை 200 ஆண்டு காலவரையறையில் கட்டப்பட்டது தான் கஜூராஹோ இந்த இடத்தில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிற பல கோவில்கள் உண்டு. இலக்குமணன் கோவில், கலிஞ்சர் கோவில், மற்றும் சமண தீர்த்தங்களின் கோவில் அந்த வகையில் காந்தாரிய மஹாதேவர் கோவிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காலத்தின் ஓட்டத்தில் இந்த கோவில் வெள்ளத்தால் மறைக்கப்பட்டிருந்தது 19 ஆம் நூற்றாண்டில் தான் இந்த கோவிலை வெளிக்கொணர்ந்தனர். கஜூராஹோ எனும் கிராமத்தில் மேற்கு பகுதியில் நினைவு சின்னக் கோவில்களின் வரிசையில் மிகப்பெரிய கோவில் இதுவே.

இந்த கோவில் குகை போன்ற அமைப்பை கொண்டது. எனவே சூரிய ஒளி கோவிலினுள் விழ வேண்டும் என்பதற்காக கோவிலின் சுவர்களில் சரியான சாளரங்கள் பொருத்தி கட்டியிருக்கிறார்கள். பஞ்சயாதன முறைப்படி மஹாதேவர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கர்பகிரஹ மேடையானது 4 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோவிலின் ஆச்சர்யகரமான விஷயமாக இக்கோவில் கோபுரத்தில் 84 சுருள் வடிவிலான விமானங்கள் உள்ளன .

இக்கோவிலில் ஒரே பாறையிலான சிற்பங்கள் உண்டு. சிவன், பார்வதிக்கு பிரத்யேக சன்னிதியும். மூலவராக சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மகோபாவிற்கு 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கஜூராஹோ இரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். கஜூராஹோ விமான நிலையத்திலிருந்து டில்லி, ஆக்ரா மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு விமான சேவை உண்டு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News