Kathir News
Begin typing your search above and press return to search.

வருடத்திற்கொருமுறை திறக்கப்படும் கோவில்! வருடம் முழுவதும் எரியும் அதிசய தீபம்!

வருடத்திற்கொருமுறை திறக்கப்படும் கோவில்! வருடம் முழுவதும் எரியும் அதிசய தீபம்!

வருடத்திற்கொருமுறை திறக்கப்படும் கோவில்! வருடம் முழுவதும் எரியும் அதிசய தீபம்!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  25 Feb 2021 8:02 AM GMT

ஹாசனாம்பா கோவில் என்பது கர்நாடகாவின் ஹாசன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மஹா சக்திக்கு அர்பணிக்கப்பட்டது. தேவியை தான் இங்கே அம்பா என்றழைக்கின்றனர். இந்த கோவ்வில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவில்கள் பல அதிசயங்களா, மர்மங்களால், ஆச்சர்யங்களால் நிறைந்தது.

அதில் ஒன்று இந்த கோவிலில் இருக்கும் தேவியை பக்தர்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும். குறிப்பாக அக்டோபர் அல்லது நவம்பரில் வரும் தீபாவளியை ஒட்டி மட்மே தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த கோவிலை யார் கட்டினார்கள் என்ற தெளிவான வரலாறு இல்லை. ஆனால் உள்ளே கருவறை அருகே புற்று இருக்கிறது. அது அம்மனுக்கு நிகரானதாக போற்றி வழிபடப்படுகிறது. கட்டிடக்கல்லை நிபுணர்கள் இந்த கோவிலின் கட்டிடகலை கர்நாடாக கலாச்சாரத்தின் உச்சம் என்று போற்றுகின்றனர். இந்த கோவில் ஹோசாலா கட்டிடக்கலைக்கு தக்க உதாரணம் என மெச்சுகின்றனர்.

இந்த கோவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒரு வாரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திறகாக திறக்கப்படுகிறது. பின் நடை அடைக்கப்படும் போது ஒரு விளக்கு ஏற்றப்பட்டு, சில மலர்கள், தண்ணீர் மற்றும் இரண்டு அடுக்கு அரிசி மட்டுமே உள்ளே வைத்து பூட்டப்படுகிறட்து. இதுவே அடுத்த ஆண்டு கதவு திறக்கப்படும் வரை அம்மனுடன் இருப்பவை.

இதிலிருக்கும் ஆச்சர்யம் என்னவெனில் நந்தா விளக்கெனும் நெய்தீபம் அடுத்த ஆண்டு திறக்கபடும் வரையில் எரிவதும், பின் தேவிக்கு படைத்த அன்ன நெய்வேதியம் அடுத்த கோவில் நடை திறக்க்கப்படும் வரை கெடாமல் இருப்பதும் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமா கருதப்படுகிறது.

எனவே இந்த அதிசய அம்மனை காண நடை திறக்கப்படும் அந்த ஒரு வாரகாலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே கூடுவது வழக்கம். ஒரு முறை ஏழு தேவதைகளான பிராமி, மஹேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹ்ஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகியோர் பூலோகத்தில் உள்ள ஹாசன் பகுதிக்கு வந்ததாகவும் ஹாசன் எனும் இடத்தில் இருக்கும் அழகை கண்டு மயங்கியதாகவும் அதில் குறிப்பாக மஹேஸ்வரி, கெளமாரி மற்றும் வைஷ்ணவி ஆகியோர் இங்கே நிரந்தமராக புற்று வடிவில் தங்கிவிட்டதாக நம்பப்படுகிறது.

மற்றொரு அதிசயமாக இந்த கோவிலினுள் ஒரு கல் உள்ளது. தன்னுடைய பக்தையாக ஒரு பெண்ணின் மாமியார் அந்த பெண்ணை கொடுமை படுத்தியதாகவும், இதனால் கோபமுற்ற ஹாசம்பா அந்த மாமியாரை கல்லாக போக சாபமளித்தாகவும் நாட்டுபுற கதை உண்டு. இங்கு அதிசயம்ம் என்னவெனில், இந்த கல்லானது ஒவ்வொரு ஆண்டும் மூடிய கதவு திறக்கப்படும் பொழுது சிறிது தூரம் அம்மனை நோக்கி நகர்ந்து செல்கிறது. எப்போது இந்த கல் அம்மனின் பாதத்தை சென்றடைகிறதோ அப்போது கலியுகமாக இருக்கும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News