அதிர்ஷ்டம் இல்லையே என வருந்த வேண்டாம்! இதை செய்தால் போதும்..
By : Kanaga Thooriga
பிரச்சனைகளை விடவும் தீர்வை அதிகம் கொடுத்திருப்பதால் நமது பாரம்பரியத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். சாஸ்திரங்கள், புராணங்கள், ஆகியவற்றின் அடிப்படையை நாம் அறிந்திருந்தாலே பெரும்பாலும் நம் அனைத்து பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு கண்டுவிட முடியும்.
நம்முடைய வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் பெரும்பாலும் இரண்டு விஷயங்களால் ஏற்படுகின்றன. ஒன்று நம் கர்ம வினைகளின் வெளிப்பாடாக ஏற்படுகிறது, மற்றொன்று நாம் தெரியாமல் செய்த தவறுகளின் தொடர்ச்சியாக ஏற்படுகிறது. நமது கர்ம வினைகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு, நாம் நல்ல கர்மாக்களை சேர்ப்பது. நாம் அறியாமல் செய்கிற தவறுகளுக்கான பிராயச்சித்தமாக நம் புராணங்களில் புனித நூல்களில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மூழ்கிவிடாமல், அதற்கான தீர்வுகளை நாம் தேட வேண்டும். வாழ்வில் பணம், காதல் மற்றும் தொழில் இவைகளையும் தாண்டியும் சில தனிப்பட்ட பிரச்சனைகளை உண்டு. அதனை சீர் செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
நீங்கள் அதிகமாக கோபம் அடைபவர் என்றால், உங்கள் கட்டிலின் கீழோ அல்லது உங்கள் படுக்கை அருகினிலோ, செம்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்கவும். மற்றும் உங்கள் தலையனையின் கீழ் இரத்த சந்தனத்தை வைத்திருந்தாலும், உங்கள் மனநிலையில் ஒரு அமைதி நிலவி கோபம் குறைவதற்கான வாய்ப்பாக அது அமையும்
உங்களுக்கு வாழ்வில் வெல்ல வேண்டும் என்கிற வைராக்கியம் அதிகமாக வேண்டும் என்றால், வெள்ளி பொருட்கள் ஏதோவொன்றில் நீரை நிரப்பி உங்கள் படுக்கையின் அருகில் வைக்கவும். மற்றும் உங்கள் சருமத்தில் படும்படியான வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம், துணிவு அதிகம் பிறக்கும்.
உங்களுக்கு குண்டலி தோஷங்கள் ஏதும் இருப்பின் அது உங்கள் தைரியத்தை மட்டுப்படுத்தும். எனவே உறங்கும் போது தலையணையின் கீழ் தங்கம் அல்லது வெள்ளி வைத்து உறங்குவது உங்கள் தைரியத்தை பல மடங்கு கூட்டும்
உங்கள் எல்லையற்ற அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்க, வெள்ளியாலான மீனை நீர் கிண்ணத்தில் வைத்திருக்கலாம். மேலும் திருஷ்டிகளை தவிர்ப்பதற்கு உங்கள் படுக்கையின் அருகில் 21 நாட்கள் இரும்பு பாத்திரத்தில் நீரை வைத்திருங்கள். மேலும் நீல நிற கல்லை உங்கள் தலையணையின் கீழ் வைத்திருந்தால் கண் திருஷ்டி நீங்கும்.
இவையணைத்தும் சாஸ்திரங்களுள் ஒன்றான வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவையேயாகும். எனினும் ஒருவரின் கோபம், மற்றும் இதர எதிர்மறை எண்ணங்களை தொலைவில் வைக்க நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்.