Kathir News
Begin typing your search above and press return to search.

ஆற்றின் படுகையில் ஆயிரமாயிரம் லிங்கங்கள் - ஆச்சர்யமூட்டும் சஹஸ்கரலிங்கேஷ்வரர்.!

ஆற்றின் படுகையில் ஆயிரமாயிரம் லிங்கங்கள் - ஆச்சர்யமூட்டும் சஹஸ்கரலிங்கேஷ்வரர்.!

ஆற்றின் படுகையில் ஆயிரமாயிரம் லிங்கங்கள் - ஆச்சர்யமூட்டும் சஹஸ்கரலிங்கேஷ்வரர்.!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  18 Dec 2020 5:30 AM GMT

கடவுளின் இருப்பை நாம் உணரும் தருணம் மிகவும் அற்புதமானது. அவர் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்பது தான் நம் மரபு. அனைத்தும் கடவுள், அனைவரும் கடவுள் என்கிற மிகப்பெரிய தத்துவத்தை நமக்கு உணர்த்துவது நம் மரபு. இருப்பினும் அவரை நேரில் காண்கிற போது எழுகிற உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

அந்த வகையில் நம் கர்நாடாக பகுதியில் அதிசயமாய் ஒரு நிகழ்வு, அங்கே ஓடும் ஆற்றின் படுகையில் ஆயிரமாயிரம் சிவலிங்கள் கிடைத்துள்ளன. இது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது. கர்நாடாக பகுதியில் அமைந்துள்ள உத்தர் கனராவில் ( கர்நாடாகவின் வடபகுதி இருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சிருஷி பகுதி. இங்கு நீர் வரத்து குறைகிற போது ஆயிரமாயிரம் சிவலிங்கங்கள் தென்படுகின்றன.

ஆயிரம் லிங்கங்கள் இருக்கும் இடத்தை சஹஸ்ரலிங்கம் என்றழைக்கின்றனர். சிவலிங்கத்தோடு சேர்ந்து நந்தி தேவரும் இங்கெ அமைந்திருப்பது இந்த இடத்தின் தெய்வீக தன்மையை மேலும் கூட்டுகிறது. இந்த இடம் சிருசியின் அரசர் சதாசிவராய் அவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. 1678 முதல் 1718 வரையிலான கால கட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது .

இதிலிருக்கும் மற்றொரு ஆச்சர்யம் என்னவெனில், இங்கே காணப்படும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் முன்பாகவும் ஒரு நந்தி தேவர் செதுக்கப்பட்டிருக்கிறார். அரசர் சதாசிவராய் மறைந்த பின்பு, இந்த சிவலிங்கங்கள் பெரும் அலையால் சூழப்பட்டு மூழ்கியிருந்ததாகவும் ஆனால் தற்போதைய சூழலில் நிலவும் கடும் வெப்பத்தால் , ஆற்று நீர் வற்றி இந்த அதிசயம் வெகு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இடம் வெளிக்கொணரப்பட்ட பின் ஒவ்வொரு சிவராத்திரியின் போதும், இந்த புனித இடத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். இந்த இடம் குறித்து மஹாபாரதத்திலும் குறிப்புகள் உண்டு. இதிலிருக்கும் மற்றொரு ஆச்சர்யம் என்னவெனில், இந்த சிவலிங்கங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் மைய லிங்கம் பிப்ரவரி மாதத்தில் மட்டுமே தென்படும். இந்த இடத்தை சகஸ்ரலிங்கேஸ்வரர் கோவில் என அழைக்கின்றனர். இதை போலவே ஆச்சர்யமான அமைப்பு இந்தியாவிற்கு வெளியே கம்போடியாவில் இதை போலவே சஹஸ்கரலிங்கம் அமைந்துள்ளது. அங்கோர் வாட் கோவிலிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News