Kathir News
Begin typing your search above and press return to search.

'நவபாஷாண சிலை' உள்ள மூன்று முருகன் கோவில்கள்

நவ பாஷாண சிலைகள் உள்ள மூன்று முருகன் கோவில்கள் பற்றி காண்போம்.

நவபாஷாண சிலை உள்ள மூன்று முருகன் கோவில்கள்
X

KarthigaBy : Karthiga

  |  18 Nov 2023 1:38 PM GMT

'பாஷாணம்' என்றால் விஷம் என்று பொருள். நவ என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும். நவபாஷாணத்தையும் முறைப்படி கட்டுப்படுத்தி உபயோகிக்கும் தன்மையை சித்தர்கள் பெற்றிருந்தனர். வேதியியல், இயற்பியல் பண்புண்டு. சித்தர்கள் அதில் உள்ள அணுக்களை முறைப்படி பிரித்து மீண்டும் சேர்ப்பது நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.


சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம் ,தொட்டி பாஷாணம் என்பதே நவபாஷாணங்கள் ஆகும். இந்த நவபாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்து இருப்பதாக சித்தர்கள் கண்டறிந்துள்ளனர் . அதனை கட்டுதல் என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள் நவகிரகங்களின் சக்தியை பெற்று விடுவதாக நம்பிக்கை.


தமிழ்நாட்டில் பழனிமலை முருகன் கோவில் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் மற்றும் தேவிபட்டினத்தில் உள்ள ஒரு கோவில் ஆகிய மூன்று இடங்களில் தான் நவபாஷாண சிலைகள் இருக்கின்றன. இதில் பழனி மற்றும் பூம்பாறையில் உள்ள நவபாஷாண சிலைகள் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News