திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: கொட்டும் மழையிலும் கிரிவலம் சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு தினமும் கோயிலில் பஞ்சமூர்த்திகள் உலா மற்றும் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
By : Thangavelu
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு தினமும் கோயிலில் பஞ்சமூர்த்திகள் உலா மற்றும் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே 10ம் நாளான இன்று (நவம்பர் 19) அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்ப்டடு அலங்கார தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவையும் நடைபெற்றது. இதனையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபமும் ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் மலையில் மகாதீபம் ஏற்று நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக திமுக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் 20000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கோயில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதே நேரத்தில் மலை உச்சியிலும் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அந்த சமயத்தில் கோயில் கொடிமரத்தின் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களும் பார்த்து தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பரணி தீபத்தை எடுத்து செல்கின்ற நிகழ்வில் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்து கொண்டே சாமி தரிசனம் செய்தனர். அது மட்டுமின்றி மழையில் நனைந்தவாறு கிரிவலமும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Maalaimalar