செய்யும் பூஜையின் முழு பலன் கிடைக்க, இவற்றையெல்லாம் தவறியும் செய்து விடாதீர்கள்!
செய்யும் பூஜையின் முழு பலன் கிடைக்க, இவற்றையெல்லாம் தவறியும் செய்து விடாதீர்கள்!

பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நம் வீட்டின் ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் பேணி காப்பதற்காக செய்யப்படுவது என்பதை நாம் அனைவருக் அறிவோம். பெரும்பாலும் புரோகிதர்களின் உதவியுடன் சில முக்கிய பூஜைகளை நாம் செய்வோம்.
ஆனாலும் நாம் சில பூஜைகளை தனித்து செய்கிற போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள் உண்டு. குறிப்பாக அதில் செய்யக்கூடாத சில முக்கிய குறிப்புகள் உண்டு. இவை கேட்பதற்கு எளிதானது தானே… என கடைப்பிடிக்காமல் விடுகிற போது அதற்குறிய எதிர்வினைகளை நாம் சந்திக்க நேரலாம்.
இந்த பூஜை வயிறு நிரம்ப உண்டு விட்டு செய்யக்கூடாது. அதிகாலை எழுந்து நீராடிய உடன் செய்ய வேண்டும். அதை போலவே இந்த பூஜையை மற்றவர் தோட்டத்திலிருந்து மற்றும் இலவசாம கிடைத்த பொருட்களிலிருந்து மற்றும் கடனாக பெற்ற பூக்கள், பழங்கள் இலைகளை கொண்டு செய்யாதீர்கள்.
உங்களால் ஆன அளவில் பூக்களை, பழங்களை வாங்கி இந்த பூஜையை செய்யலாம். இந்த பூஜை தொடங்கும் முன் முறையாக கை, கால் ஆகியவற்றை சுத்தமாக தூய்மைப்படுத்தி செய்ய தொடங்க வேண்டும்.
நெய்யாலான தீபம் மற்றும் தீபம் ஆகிய இரண்டும் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். சுத்தமானது மற்றும் புனிதமானது என்கிற காரணத்தால் பூஜைக்கான பிரசாதங்களை சுத்தமான நெய்யிலேயே செய்யுங்கள். தீபம் ஏற்ற சராசரி துணியால் ஆன திரியை பயன்படுத்தாதீர்கள்.
அசலான காட்டன் திரியை பயன்படுத்துங்கள். தெய்வ விக்ரஹத்திற்கு அபிஷேகம் செய்யப்போகிறீர்கள் எனில், திருவுருவச்சிலையை இடது கையால் ஏந்தி அபிஷேகம் செய்யாதீர்கள். பயன்படுத்திய பொருட்கள், பழைய பொருட்களை இறைவனுக்கு அர்பணிக்காதீர்கள். நீலம் மற்றும் கருப்பு நிற உடையை இறைவனுக்கு அர்பணிப்பதை தவிர்த்து விடுங்கள்.
கைகளால் பூஜை செய்கிற போது நகங்களில் நீர் படாமல் இருக்க வேண்டும். எனில், பூஜைக்கு முன்பாக நகங்களை முறையாக வெட்டி பராமரிக்க வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கென பிரத்யேக பூஜையை செய்கிற போது, மற்ற கடவுளர்களை ஒதுக்குவது அல்லது பூஜையில் முக்கியத்துவம் கொடுக்காமல் தவிர்ப்பது போன்றவற்றை செய்யாதீர்கள்.
அதை போலவே ஒரு கடவுளை கண்களால் கண்டு, மனதிற்குள் அவரை வேறொரு கடவுளாக பாவித்து கற்பனையில் பூஜை செய்யாதீர்கள். இருட்டான சூழலை தவிர்த்து விட்டு, முதற்கடவுள் விநாயகரை வணங்கி எந்தவொரு பூஜையையும் செய்து வருவது பூஜைக்கான முழு பலனை கொடுக்கும்.