Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பெருக்க வாஸ்து முறைப்படி என்ன செய்யலாம்?

வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பெருக்க வாஸ்து முறைப்படி என்ன செய்யலாம்?

நன்றி: alamystock

G PradeepBy : G Pradeep

  |  4 May 2021 12:16 AM GMT

ஆற்றலை எனும் அம்சத்தை நம் புறக்கண்ணால் நம்மால் காண முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பெரியோர்களிடம் நாம்ம் பெரும் ஆசியும் அப்படிபட்டதே ஆசிகளை நாம் கண்ணால் காண முடியாது. ஆனால் ஆசியை பெற்ற பின் நமக்கு பல நல்லவைகள் நிகழும் போது, அதை உணர முடியும்.


ஒரு வீடு எப்போது இல்லமாக மாறும் எனில், அங்கே நல்லதிர்வுகள், நல்ல சூழல், நல்ல உணர்வுகள் நிறைந்திருக்கும் பொழுது. இந்த அடிப்படையில் தான் வீடு கட்டி முடிக்கப்பட்டாலோ, புணரமைக்கப்பட்டாலோ அங்கே பூஜை நடத்தி பெரியோர்களின், உற்றார் உறவினர்களின் ஆசி பெறப்படுகிறது. ஒரு இல்லத்தில் பல விதமான அதிர்வுகள் நிரம்பியிருக்கும்.

அகத்தில் ஏற்படும் உணர்வு ரீதியான அதிர்வுகள், உளவியல் ரீதியான அதிர்வுகள் போன்றவை மற்றும் புறத்தில் இருக்ககூடிய நிறத்தின் அடிப்படையிலான அதிர்வுகள், வீட்டை சுற்றி வைத்திருக்கும் பொருட்களின் சார்ந்த அதிர்வுகள் என பல ஆற்றல்கள் சேர்ந்தே ஒரு இல்லத்தை உருவாக்குகின்றன.

அந்த வகையில் ஒரு இல்லத்தை நல்ல அதிர்வுகளுடன் வைத்திருப்பது எப்படி?


இயற்கையொடு இசைந்திருக்க வேண்டும். உதாரணமாக ஒரு வீடு என்பது இயற்கையான வெளிச்சத்தை, இயற்கையான காற்றை உள்ளே அனுமதிப்பதாக இருக்க வேண்டும். இயற்கைக்கு மன அமைதியை உருவாக்கும் தன்மை உண்டு. முடிந்த அளவில் வீட்டினை இயற்கையின் அம்சங்களுடன் வைத்திருக்க வேண்டும், திரைச்சீலையை மூங்கில் போன்றவற்றில் உருவாக்கலாம். அலங்கார கற்கள், மர வேலைபாடுகளை அதிகம் பயன்படுத்தலாம்.

வீட்டை முறையாக பராமரிப்பது, தேவையற்ற பொருட்கள், உபயோமில்லா பொருட்கள், உடைந்தவை, பழுதானவை, மற்றும் எதிர்மறையான நினைவுகளை தரக்கூடிய பொருட்களை முறையாக அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

தியான பயிற்சியை பெற்றவர்கள் எனில், இல்லத்தில் ஒரு நாளில் இரு முறை தியானிப்பதால் அந்த இல்லத்தின் ஆரா மிக வலிமையானதாக இருக்கும். மற்றும் வீட்டின் சுவர்கள், பொருட்கள் நல்ல ஆற்றலை, நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும் நிறத்தில் அமைத்துகொள்ளுங்கள். பச்சை, மஞ்சள், வெள்ளை போன்றவை மனதிற்கு இதம் தரும். கருப்பு நிறம் என்பது நவீன யுகத்தில் ஸ்டைலான நிறம் என்கிற அடையாளத்தை பெற்றிருந்தாலும், அதை முடிந்த அளவில் தவிர்க்கலாம்.

இல்லத்தில் சீரான இடைவெளியில் ஹோமங்கள், பூஜைகளை பண்டிதர்களை கொண்டு செய்து வந்தால், நாமறியாமல் ஏதேனும் தீய அதிர்வுகள் இருந்தாலும் கூட அவை விலகி நன்மை நிறைந்திருக்கும் இல்லமாக நம் இல்லம் அமையும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News