Kathir News
Begin typing your search above and press return to search.

ஆண்டுக்கு இருமுறை அண்ணாமலையாரே கிரிவலம் வரும் நாட்கள்!

பக்தர்கள் கிரிவலம் வருவது அனைவரும் அறிந்ததே, ஆனால் இறைவனை கிரிவலம் வருகிறார்.

ஆண்டுக்கு இருமுறை அண்ணாமலையாரே கிரிவலம் வரும் நாட்கள்!

KarthigaBy : Karthiga

  |  24 Nov 2023 8:00 AM GMT

பக்தர்கள் கிரிவலம் வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான் ஆனால் அண்ணாமலையாரும் வருடத்திற்கு இரண்டு முறை கிரிவலம் வருவதாக நம்பிக்கையாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்று கார்த்திகை தீபத்திருநாள் அன்று அண்ணாமலையார் கிரிவலம் வருகிறார். மற்றொரு நாள் தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. கிரிவலம் வரும் முறை பற்றி காண்போம்.


அண்ணாமலையார் திருக்கோவிலில் வீற்றிடிருக்கும் செந்தூரப் பிள்ளையார், கம்பத்து இளையனார், கருவூரில் உள்ள அண்ணாமலையார், உண்ணாமலை அம்மை வணங்கி, கிழக்கு திசையில் உள்ள ராஜகோபத்தின் முன் நிற்க வேண்டும். அங்கிருந்து கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும். கிரிவலம் செல்வதற்கு முன்தினம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்.


சுத்தமான ஆடை அணிந்து, விபூதி பூசி தானம் கொடுத்து , மலையை சுற்ற வேண்டும். காலணி அணிதல் கூடாது. பயம், கோபம், சோகம், குடும்ப பிரச்சினைகளை கோவிலின் முன் உள்ள பலிபீடத்தில் விட்டுவிட வேண்டும். வாகனங்களில் செல்லுதல் உரக்க சத்தம் போட்டு பேசுதல், கையை வேகமாக வீசி நடத்தல் கூடாது. ஒரு பத்து மாத கர்ப்பிணி பெண் என்னைக் குடத்தை தலையில் சுமந்து கொண்டு செல்வது போல கிரிவலம் வர வேண்டும். சிவ நாமம் பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லிக் கொண்டே கிரிவலம் வர வேண்டும்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News