Kathir News
Begin typing your search above and press return to search.

உறங்க கூடாத இரு வேளைகள்! அந்நேரத்தில் தெய்வீக ஆற்றல் நிரம்பியிருக்கும் அதிசயம்!

உறங்க கூடாத இரு வேளைகள்! அந்நேரத்தில் தெய்வீக ஆற்றல் நிரம்பியிருக்கும் அதிசயம்!

உறங்க கூடாத இரு வேளைகள்! அந்நேரத்தில் தெய்வீக ஆற்றல் நிரம்பியிருக்கும் அதிசயம்!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  27 Feb 2021 5:13 AM GMT

ஒரு விஷயத்தின் ஆதி மற்றும் அந்தம் இரண்டுமே முக்கியமானது. அதை போல் ஒரு நாளின் துவக்கம் மற்றும் முடிவு இரண்டும் முக்கியமானது. இங்கே நாம் நாளின் துவக்கம் மற்றும் இறுதி என்பது அந்த நாளின் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும். இந்து மரபில் இந்த இரு வேளைகளும் முக்கியமானது.

இந்த இரு வேளைகளிலும் தெய்வீக ஆற்றல் அபரிமீதமாக இருக்கிறது. தியான பயிற்சிகள், சுப காரியங்கள் போன்ற பல விதமான நல்ல செயல்கள் அதிகாலையிலும் மற்றும் மாலை வேளையிலும் செய்வதை கண்டிருக்கிறோம். இது இறைவனின் வருகைக்கான நேரம். எனவே இந்த முக்கியமான தருணத்தில் நாம் உறங்குவது இறைவனை ஊதாசீனப்படுத்துவதை போன்றாகும்.'

மாலை நேரத்தை நம் பாரம்பரியத்தில் "விளக்கு வைக்கும் நேரம் " என்பார்கள். இந்த நேரத்தில் விளக்கை நோக்கி வணங்கிய வாரே வீட்டின் முகப்பு விளக்குகள் ஏற்றப்படும். காரணம், அந்த ஒளி நம் வீட்டில் இருக்கும் தீய சக்திகளை அழித்து விட்டு, நல்ல அதிர்வுகளை வீட்டிற்குள் அழைத்து வரும் என்பது நம்பிக்கை.

முப்பெரும் தேவியரும் சஞ்சரிக்கும் மாலை பொழுதில், வீட்டின் குழந்தைகள் படிப்பது, தெய்வீக பாடல் கேட்பது போன்ற நல்ல அதிர்வுகள் நிறைந்த பணிகளை ஒருவர் மேற்கொள்ளும் பொழுது அதற்கு இந்த இயற்கையே இசைவாக அமையும். மாறாக அந்த நல்ல பொழுதில் உறங்கி அதனை வீண் செய்வது, நமக்கு இயற்கை கொடுக்கிற நல்ல வாய்ப்பை நாம் நழுவ விடுவதை போன்றதாகும்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சாத்வீக, ரஜோ மற்றும் தாமச குணத்தில் இருக்கிறது. அதாவது, அமைதி, தீவிரம், மந்தம் என எளிமையாக இந்த மூன்று குணத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஒருவர் மாலை நேரத்தில் தூங்குகிற போது அவருக்கு மந்த குணம் அதாவது தாமச குணம் மிக அதிகமாக உயர்கிறது என சொல்லப்படுகிறது.

அறிவியல் ரீதியாகவும், மாலையில் உறங்கி எழுவது புத்துணர்ச்சியை தராது. செளகரியமான மனநிலையையும் கொடுக்காது. மேலும் செரிமாணத்தை பாதிக்கும் எனவே இந்த நேரத்தில் உறங்குவதை நம் முன்னோர்கள் அனுமதிக்கவில்லை. எனவே நல்ல அதிர்வுகள்,நல்ல ஆற்றல் எங்கிருந்தாலும் அதற்கு இசைவாக நம்மை ஆக்கி நல்ல வாய்ப்புகளை வசமாக்க வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News