Kathir News
Begin typing your search above and press return to search.

கல் உப்பை பயன்படுத்தி வீட்டில் உள்ள தீய ஆற்றலை போக்கும் ஆச்சர்ய வழிமுறை!

கல் உப்பை பயன்படுத்தி வீட்டில் உள்ள தீய ஆற்றலை போக்கும் ஆச்சர்ய வழிமுறை!
X

G PradeepBy : G Pradeep

  |  5 March 2021 7:50 AM GMT

இந்து மரபில் கடல் உப்பு அல்லது கல் உப்பு என்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அனைவிதமான பண்டிகைகளின் போதும், உப்பு படைப்பது வழக்கம். துகளாக்கப்ப்டாத கல் உப்பை கொன்டு விநாயகர் சிலையை வடிக்கும் வழக்கமும் உண்டு.


காரணம், கடல் உப்பிற்கு பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் சக்தி உண்டு. எனவே அதன் பயன்பாடு ஆன்மீக ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடல் உப்பு என்பது சுத்திகரிப்பின் அடையாளம். எனவே வீடுகளில் கடல் உப்பை பயன்படுத்துகிற போது தீய ஆற்றல்கள் தவிர்க்கப்படுகிறது என்பது நம்பிக்கை.

சமையலுக்கு மாத்திரம் இல்லாமல், சமயங்களில் வீடுகளை சுத்தம் செய்யும் போதும் தண்ணீரில் சிறிதளவு கடல் உப்பு கலந்து சுத்தம் செய்வது ஆரோக்கியரீதியாகவும் நன்மையை தரும். மேலும் கடல் உப்பை சிறு சிறு கிண்ணங்களில் நிரப்பி வீடுகள் தோறும் வைத்திருந்தால் வாஸ்து தோஷம் ஏதேனும் இருப்பின் நீங்கும் என சொல்லப்படுகிறது.



வீடுகளில் செல்வ வளம் பெருக, உப்பை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என சில சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதாவது வீட்டில் உள்ள பொருட்களை சிறிது அளவு உப்பினை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து வீட்டில் உள்ளவர்கள் மீதோ அல்லது வீட்டின் மீதோ நம் பொருளாதாரத்தின் மீதோ கண் பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால் சிறிது உப்பினை எடுத்து பணப்பெட்டி, அல்லது கண் பட்டதாய் கருதும் நபரின் உச்சந்தலையின் மீது மூன்று முறை சுற்றி திருஷ்டி கழிக்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி குளியலறையில் ஒரு சிறு கிண்ணம் அல்லது குவளையில் உப்பை இட்டு வைப்பது, தீய ஆற்றலை தூர விரட்ட உதவும் எளிய உத்தி. ஆனால் இந்த உப்பினை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பது விதி. இவ்வாறு செய்வதால் வீட்டிலுள்ள தீய ஆற்றல் அழிந்து அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்பிக்கை.

உணவருந்த அமரும் மேஜை இலைகளில் உப்பினை வைப்பதன் மற்றொரு ஆன்மீக காரணம். உப்பு என்பது செல்வத்தின் அடையாளம். உப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை முதன்மைப்படுத்துவ்வதால் வீட்டில் உணவும், வளமும் குறையாது என சொல்லப்படுகிறது.

உங்கள் மீது படிந்துள்ள பொறாமை, மற்றும் தீய திருஷ்டியை நீக்கி பொருளாதார வளத்தை பெருக்க சிவப்பு துணியில் உப்பினை கட்டி அதனை வீட்டு வாசலில் கட்டலாம். மற்றும் தென்மேற்கு மூலையில் ஒரு குவளை தண்ணீரில் சிறிது உப்பினை இட்டு வைக்கலாம். இந்த நீரை மாற்றுவது அவசியம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News