வீட்டின் செல்வத்தை பெருக்க கடைப்பிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள்
By : G Pradeep
நலமும் வளமும் தினம் தினம் அதிகரிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். குறிப்பாக பணம் என்பது பெருக வேண்டும் என நினைப்பது இன்றைய யதார்த்தம் . விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும், நேர்மையான வழியிலுமே பணம் பெருகும் என்ற போதும். பிரபஞ்ச ஆற்றலை கொஞ்சம் கவனத்தோடு பயன்படுத்தினால் பணம் பெருகும் என்ற நம்பிக்கையும் பரவலாக உண்டு.
அதிலும் குறிப்பாக பணம் பெருக வேண்டுமென்றால் பணத்தை இந்த இடங்களிலெல்லாம் வைக்க வேண்டும் என்இறு சொல்லப்படுகிறது. உங்கள் இல்லத்தின் பண கஜானாவை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும் மற்றும் மேற்கு திசையில் நகைகளையும் மூதாதையரின் வளம் மிக்க பொருள்களையும் வைக்க வேண்டும்.
நீங்கள் திறக்கிற போது உங்கள் நகை பெட்டகம், வடக்கு புறம் நோக்கி திறக்கும் அலமாரியாக இருக்குமே ஆனால் ஒருபோதும் பணத்திற்கோ நகைக்கோ குறைபாடு வராது என சொல்லப்படுகிறது.
இதில் சொல்லப்படும் மற்றொரு தார்பரியம் நீங்கள் பணத்தையோ நகையையோ தெற்கு புறம் வைத்தால் எந்த பாதிப்பும் இருக்காது அதே வேளையில் எந்த நன்மையும் இருக்காது.
அதை போலவே சிலர் படிகட்டுகளின் அடிப்பகுதியிலோ அல்லது கழிவறைக்கு எதிர்புறமாகவோ பணப்பெட்டியை வைத்திருந்தால் அது சரியான முறை அல்ல. அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
பணத்தை பெருக்க தேவி மகாலட்சுமையை வணங்குவதும், அம்பாளின் படத்தை வைப்பதும் வழக்கம். இந்த வழக்கத்தில் இலட்சுமி தேவியின் இருபுறத்திலும் யானைகள் தங்களின் தந்தத்தை உயர்த்துவது போல் இருக்கும் புகைப்படம் வைப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
உங்கள் வீட்டு ஹாலில் திரும்பும் திசைகளில் பணத்தை அதிகரிக்கும் குறியீடு, ஓவியம், படம் போன்றவற்றை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை பெருக்குமாம்
மேலும் தென்கிழக்கு மூலையில் சீனாவின் ஜேட் செடியை வைத்து வளர்ப்பது பணத்தை அதிகரிக்க செய்யுமாம்
மேலும் தென் கிழக்கு பகுதியில் நீர் நிலை போன்ற பவுன்டைன் அல்லது நீர் நிரம்பிய குடம் போன்று நீர் சார்ந்த அலன்ங்கார பொருட்களை வைப்பது பணத்தை பெருக்கும் என சொல்லப்படுகிறது.
உங்கள் மீன் தொட்டியில் போதுமான ஆக்ஸிஜன் இருப்பதை தினசரி உறுதி செய்து கொள்ளுங்கள் மீன்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பதும் பணத்தை பெருக்கும் குறியீடாக கருதப்படுகிறது.
அது மட்டுமின்றி நீங்கள் டைனிங் டேபிளை எந்த இடத்தில் வைத்திருந்தாலும் அது கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி ஒரு கண்ணாடியை மாட்டிவிடுங்கள். இது எப்போதும் உணவு குறையாமல் இருப்பதற்கான சகுனம் ஆகும்.
மேலும் வீட்டின் சமையலறையில் பழங்கள், காய்கறிகளின் படங்களை மாட்டி வையுங்கள் இது பசியை தூண்டும் அதே வேளையில் உணவின் இருப்பை எப்போதும் உறுதி செய்யும் நிமித்தமாகும்.