வில்லங்கமான பிரச்சனைகளை வேரோடு அகற்றி பிரகாசமான வாழ்வு தரும் வில்வநாதீஸ்வரர் ஆலயம்!
கடலூர் வில்வநகர் என்கிற வில்வராய நத்தத்தில் பழமை வாய்ந்த வில்வநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
By : Karthiga
முன்பு ஒரு சமயம் கைலாயத்தில் பூத கணத்தவர் ஆயிரம் பேர் சிவஞான தெளிவை உணர வேண்டி சிவபெருமானிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். சிவபெருமானும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு ஞான உபதேசம் செய்ய முடிவு செய்தார். பின்னர் அந்த பூதகணங்களிடம் "நீங்கள் ஆயிரம் பேரும் புனித பூமியாம் புண்ணிய பாரதத்திற்கு செல்லுங்கள் அங்கே தென்கொடியில் உள்ள கெடிலம் பெண்ணை ஆற்றின் இடையே உள்ள தளத்தில் இரண்டு சுவைகளை உணர்த்தும் அடையாளமாக இரண்டு மரங்கள் அமைந்துள்ளன. ஒன்று கசப்பை உணர்த்தும் வில்வம் மற்றொன்று இனிப்பை உணர்த்தும் மாமரம்.
இந்த இரட்டை விருச்சம் அமைந்துள்ள நதிக்கரையில் ஏற்கனவே சுயம்பு வா நான் எழுந்தருளி உள்ளேன். அகத்தியர் அங்கு வந்து நாள்தோறும் எம்மை பூஜிப்பது வழக்கம். அந்த இடத்தில் நீங்கள் கூடி அஎன்னை நினைத்து பூஜை செய்து தவமிருங்கள். நான் ஒரே காலத்தில் அங்கு நேரடியாக எழுந்து அனைவருக்கும் சிவஞான தெளிவை புகட்டுகிறேன்" என்றார். இதை கேட்டு மகிழ்ந்த பூதகணத்தவர் ஆயிரம் பேரும் சிவபெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு பூலோகம் நோக்கி வந்தனர். தமிழ்நாட்டை அடைந்து பெருமான் கூறிய அடையாளத்தை மனதில் கொண்டு மாமரம் வில்வமரம் இணைந்துள்ள திருத்தலத்தை தேடி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அகத்தியர் அவர்கள் சந்தித்து வணங்கினார். அவர்களை ஆசீர்வதித்த அகத்தியர் வந்த விவரத்தை கேட்டறிந்தார். அவர்களும் உண்மையை அவரிடம் உரைத்தனர்." நான் அங்கு தான் செல்கிறேன் நீங்கள் என்னுடன் வாருங்கள்" என்று அவர்களை தன்னுடன் அழைத்து வந்து மா வில்வம் விருச்சத்திற்கு இடையே எழுந்தருளியுள்ள சிவனை காட்டினார். அவர்கள் முன்பாக சிவ வழிபாடு மற்றும் பூஜைகளை முடித்துவிட்டு அவர்களை ஆசீர்வதித்து பொதிகை மலை நோக்கி புறப்பட்டார். பின்னர் பூதகணத்தவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி புனித நீராடி முறையான சிவ வழிபாடு செய்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் செய்தனர் .
அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்கு நேரடியாக காட்சியளித்தார். தம்மை வழங்கிய ஆயிரம் பேருக்கும் சிவபெருமான் சிவஞான தெளிவை உபதேசித்தார். தெளிவு பெற்ற ஆயிரம் பேரும் சிவபெருமானுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து தாங்கள் உலகிலேயே சிவனை தரிசித்து ஒரு யுக காலம் தவம் இருக்க விரும்பினர். அதன் மூலம் சிவானந்த வேறு பெற விரும்பினார். இந்த மண் மீது இறைவனை பூஜை செய்து சிவமுக்தி அடையலாம் என்று எண்ணி அவர்கள் இவ்வாறு கேட்டனர். அப்போது ஒரு வேண்டுகோளையும் அவர்கள் வைத்தனர். அதாவது தாங்கள் தான் சிவனுக்கு அர்ச்சனை செய்வோம் என்றனர். இதற்காக வில்வ மரங்களாக அவர்கள் மாறி காலம் தோறும் வில்வ இலையால் அர்ச்சனை செய்து மகிழ்ந்து பேறு பெற விரும்பினர்.
அவர்கள் எண்ணப்படியே அனைவரும் வில்வ மரமாக மாறிட சிவபெருமான் அருள் பாலித்தார். பூதகணங்கள் ஆயிரம் பேரும் ஆயிரம் வில்வ விருட்சங்களாக இங்கு அடந்து இருந்ததால் இந்த இடம் 'வில்வாராண்யம்' என பெயர் பெற்றது. தங்கள் வில்வ இலைகளை தாங்களே உதிர்த்து எடுத்துக் கொண்டு சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து மகிழ்ந்தனர். பின்னர் வில்வ விருச்சங்களாக மாறி தவம் செய்தனர் .இவ்வாறு புகழ்பெற்ற தளம் தான் வில்வநாதீஸ்வரர் கோவில்.