Kathir News
Begin typing your search above and press return to search.

கண்களை கவர்ந்து மனதை கொள்ளை அடிக்கும் சிற்பங்களை காண வேண்டுமா? இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்

கண்களைக் கவரும் சிற்ப வேலைப்பாடுகளும் அழகும் நிறைந்த சமண தீர்த்தங்கரர்களின் ஆலயம் பற்றி காண்போம்.

கண்களை கவர்ந்து மனதை கொள்ளை அடிக்கும் சிற்பங்களை காண வேண்டுமா? இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்
X

KarthigaBy : Karthiga

  |  15 Jun 2023 8:45 AM GMT

ராஜஸ்தான் மாநிலம் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்து இருக்கிறது பாலி மாவட்டம், இங்கு ராணக்பூர் என்ற என்ற கிராமத்தில் அழகிய சிற்பங்களுடன் கூடிய சமண தீர்த்தங்கரங்களின் ஆலயம் அமைந்திருக்கிறது . மன்னனான ராண கும்பாவின் உதவியுடன் ராணக்பூரின் சமண வணிகரான தர்னாஷா என்பவர் இந்த ஆலயத்தை கி.பி 15ஆம் நூற்றாண்டில் கட்டி இருக்கிறார். சமணத் தீர்த்தங்கரர்களில் முதலாவது தீர்த்தங்கரர் ஆன ஆதிநாதர் என்னும் ரிஷபநாதர் மற்றும் ஏழாவது தீர்த்தங்கரரான சுவர்சுப நாதர் ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாக இந்த கோவில் திகழ்கிறது.


மூன்று கோவில்களின் தொகுப்பாக இது கட்டப்பட்டிருக்கிறது. சமணர்களின் ஐந்து முக்கியமான யாத்திரை தளங்களில் ஒன்று இந்த கோவில். இளம் நிறத்தில் 62 மீட்டர் நீளம் 60 மீட்டர் அகலம் என்ற அளவில் கட்டப்பட்டுள்ளது. கோவின் அழகிய குவி மாடங்கள், விமானங்கள், சிறு கோபுரங்கள் மற்றும் விதானங்கள் ரணக்பூரின் மலைச்சிறுவில் அழகாக காட்சியளிக்கிறது .


சிற்பங்களுடன் கூடிய இக்கோவிலை 1444 பளிந்து தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் ஒவ்வொன்றிலும் தமிழர்களின் பெயர் சொல்லும் பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் சிலைகள் மற்றொரு தூணில் உள்ள சிலையை பார்க்கும் வகையில் கலைநயத்துடன் செதுக்கியிருக்கிறார்கள்.


இவற்றில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 108 தலைகளுடனும் வால்களுடனும் கூடிய பாம்பு சிற்பம் மிகவும் அழகான ஒன்றாகும் . 6 அடி உயரம் கொண்ட கோவில் மூலவரான ஆதிநாதர் மற்றும் சுபர்சுப நாதர் ஆகியோரின் சிலை வெள்ளை பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் பார்சுவநாதர் கோவிலுக்கு அருகில் 22 ஆவது தீர்த்தங்கரரான நேமிநாதரருக்கும் சூரிய பகவானுக்கும் தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளது.


இக்கோவில் கட்டிட அமைப்பு நான்முக வடிவில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பண்டைய மிர்பூர் சமணர் கோவிலை அடிப்படையாகக் கொண்டு இக்கோவில் நிறுவப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். கோவில் வளாகத்தில் 13- ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்த சூரிய கோவில் சிதிலமடைந்து விட்டதாகவும் , அதன் பின்னர் மீண்டும் 15 ஆம் நூற்றாண்டில் அது கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


கோவில் அழகிய சிற்பங்களுக்கும் கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்றது. இந்த ராணக்பூர் ஜெயின் கோவிலானது, ஆனந்த கல்யாண் என்ற அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது . இந்த ஆலயம் உதய்பூரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவிலும் ஜெய்பூரில் இருந்து 370 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News