இந்த ஐந்தும் இருக்கும் இடத்தில் செல்வம் அருளும் இலட்சுமி இருக்கமாட்டார்! உடனடியாக விலக்குங்கள்.!
இந்த ஐந்தும் இருக்கும் இடத்தில் செல்வம் அருளும் இலட்சுமி இருக்கமாட்டார்! உடனடியாக விலக்குங்கள்.!
By : Thoorigai Kanaga
செல்வங்களின் அதிபதியாக விளங்குபவள் மஹாலட்சுமி. தேவர்களுக்கே செல்வ வளத்தை வளங்குபவளாக லட்சுமி தேவியே திகழ்கிறார். ஒரு முறை இந்திரனுக்கே செல்வ வளத்தில் சிக்கல் எழுந்த போது, துவாதசாக்கர் மந்திரத்தை அருளி இழந்த பெயர், புகழ், பொருள் என அனைத்தையும் மீட்டு கொள்ளலாம் என்ற அருளை வழங்கினார்.
ஒவ்வொரு வெள்ளி இரவும், இந்த மந்திரத்தை சொல்லி யார் மஹா லட்சுமியை வணங்கினாலும் அவர்களுக்கு லட்சுமி தேவியின் அருளுடன், குபேரரின் அருளும் கிடைப்பது உறுதி. அந்த தெய்வீக மந்திரம் என்னவெனில், ஏயிம் ஹ்ரிம் ஶ்ரீம் அஷ்டலக்ஷ்மியே ஹ்ரிம் ரிம் சித்வேயே மம் கிரிஹே அகச்சாகச் நமஹ சுவாஹ
விஷ்ணு புராணத்தின் படி, லட்சுமி தேவி இந்திரனுக்கு அருளிய போது, இந்திர தேவன், லட்சுமி தேவியை நிரந்தரமாக சொர்காபூரியிலேயே தங்குமாறு வேண்டினார். குறிப்பிட்ட ஐந்து விஷயங்கள் இருக்கும் இடத்தில் லட்சுமிதேவி தங்குவதில்லை அந்த ஐந்து விஷயங்கள் யாதெனில்,
காமம் அல்லது ஆசையின் காரணமாக யார் ஒருவர் தர்ம வழியில் இருந்து விலகி நடக்கிறார்களோ, அன்றாட வாழ்வில் கர்ம வினைகளின் சூழலில் சிக்கி தவிக்கிறார்களோ அங்கே லட்சுமி தேவி தங்குவதில்லை.
எந்தவொரு மனிதர் தான் என்கிற ஆணவத்துடன் நடந்து, தன்னை நாடி வருபவர்களையும், தன்னை சார்ந்திருக்கும் சூழலையும் காயப்படுத்துகிறாரோ அவர் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி நிரந்தரமாக இருப்பதில்லை.
பாவங்களின் மூலமாக இருப்பது பொறாமை. பொறாமை எனும் எதிர்மறை ஆற்றல் பலவிதமான எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் யார் ஒருவர் பொறாமையின் காரணமாக தர்மம் தவறுகிறார்களோ அவர்கள் அருகில் லட்சுமி தேவி இருப்பதில்லை.
அப்பாவி மக்களிடம் வன்முறையில் இருப்பவரிடம் லட்சுமி தேவி நிரந்தரமாக தங்குவதில்லை. இறுதியாக பெண்களை மதிக்காத மனிதர்கள், பெண்களை தவறாக நடத்தும் மனிதர்கள் லட்சுமி தேவியின் ஆசிர்வாதத்தை பெற தவறிவிடுகிறார்கள்.
எனில், லட்சுமி மாத்திரம் அல்ல அனைத்து தெய்வங்களின் அருளையும் அன்பால், தெளிந்த ஞானத்தால், செறிவான தானத்தால் ஒருவர் பெற முடியும்.
இந்த மூன்றையும் எந்த எதிர்பார்ப்புமின்றி யார் ஒருவர் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்களோ அவர்களுக்கு சகல விதமான அசிர்வாதங்களும் கிடைக்கும்.