Kathir News
Begin typing your search above and press return to search.

பணத்தை ஈர்க்க எந்த வகை மீன்களை வளர்க்க வேண்டும்? வாஸ்து சொல்வதென்ன?

பணத்தை ஈர்க்க எந்த வகை மீன்களை வளர்க்க வேண்டும்? வாஸ்து சொல்வதென்ன?
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  13 Sept 2022 6:15 AM IST

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்ற போதும், பணம் என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத சக்தி. பொன்னும், பொருளும் ஒருவரின் உழைப்பினாலும், நேர்மையான முறையிலும் கிடைக்க பெறும் போதே அதன் மதிப்பு கூடுகிறது.

இருப்பினும் சில வெளிப்புற அமைப்புகளை, சூழலை நாம் அனுசரித்து செல்கிற போது பணம் கூடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அதில் முக்கியமானது வாஸ்து மற்றும் ஜோதிட சாஸ்திரம். இவைகளின் அடைப்படையில், வீட்டில் உள்ள பின்வரும் குறிப்பிட்ட இடங்களில் பணத்தை வைத்தால் பணம் பெருகும் என்கிறார்கள்.

கிழக்கு முகமாக வீட்டின் கஜானாவையும், பணத்தையும் மேற்கு முகமாக நகைகளையும் முன்னோரின் சொத்துக்களையும் வைக்க அவை பெருகும் என்பது நம்பிக்கை.

ஒரு வேளை நீங்கள் பணம், நகை ஆகியவைகளை தெற்கு முகமாக வைத்திருக்கிறீர்கள் என்றால் அதனால் உங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது, அதே வேளையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வீட்டின் பணப்பெட்டியை எக்காரணம் கொண்டும் படிக்கட்டுகளின் கீழோ அல்லது, கழிவறை அருகிலோ வைக்காதீர்கள். அதன் மீது படிகிற அழுக்குகள் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாய் அமைந்துவிடும்.

பணப்பெட்டி வைத்திருக்கும் பெட்டியில் மறக்காமல் இருபுறமும் துதிக்கையை உயர்த்த்யவாறு இருக்கும் யானையுடன் கூடிய லக்‌ஷி படம் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

அதை போலவே நீருக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகம் உள்ளது. நீங்கள் நீர் சம்மந்தமான மீன் தொட்டி, நீர் வழியும் பொம்மைகள் போன்றவைகளை தென்கிழுக்கு மூலைகளில் வைக்கலாம்.

டிராகன் மீன் மற்றும் ஆரோவனா மீன் வாஸ்து படி பணத்தை ஈர்க்கும் மீனாக அறியப்படுகிறது. இந்த மீன்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்குமாறும், மேலும் இவைகள் சுத்தமான சூழலில் வளர்வதையும் நாம் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் இந்த வகை மீன்கள் நன்றாக உணவு உட்கொள்வதையும் மகிழ்ச்சியாக இருப்பதையும் நாம் உறுதிப்படுத்துவது அவசியம்.

நீர் விழ்ச்சி போன்ற பவுண்டைன்கள் முன்பு பெரும் பொருட்செலவு உடையதாக இருந்தது. ஆனால் இன்று மிகச்சிறிய அனைவரும் வாங்க கூடிய அளவில் சிறு சிறு பவுண்டைன் பொம்மைகள் கிடைக்கின்றன. இதில் வழியும் நீர் நல்ல சகுனத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும் டிராகன் உருவம், கப்பல் பொம்மைகள் பணத்தை ஈர்க்கும் பொருட்களாக கருதப்படுகின்றன..

Next Story
கதிர் தொகுப்பு
Trending News