Kathir News
Begin typing your search above and press return to search.

நெற்றியில் திலகமிடுவதால் என்னெனன்ன நன்மைகள்? திலகமும் திவ்யப் பயன்களும்

நெற்றியில் திலகமிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் பலன்கள்

நெற்றியில் திலகமிடுவதால் என்னெனன்ன நன்மைகள்? திலகமும் திவ்யப் பயன்களும்

KarthigaBy : Karthiga

  |  1 Aug 2022 12:00 PM GMT

திலகம் இடுவது ஆத்மீக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொதுக் கருத்து பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம்.

குங்குமம்,சந்தனம், தீருநீர் என்பவற்றை பொதுவாக திலகமிட பயன்படுத்துகின்றனர்.இந்துமத விசுவாசமாக திலகமிடுவதைக் கருதி வருகின்றனர் என்றாலும் இது மத விசுவாசத்துடன் சம்பந்தப்பட்டதோடல்லாமல் ஒரு நபருக்கு நிச்சயமாக செல்வாக்கு அளிக்கக்கூடியது.

மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியில் பொட்டு வைப்பது வழக்கம். இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.

பிரம்ம முகூர்த்தத்தில் சந்தனமும், விடியற்காலை குங்குமமும், மாலைப்பொழுதில் திருநீரும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்துக்கு உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்தப்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.

திருநீரை காலையில் நீரில் குழைத்தும் நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணியவேண்டும் மாலையில் உலர்ந்த திருநீரே அணிய வேண்டுமென்றும் விதிமுறைகள் உள்ளன.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News