Kathir News
Begin typing your search above and press return to search.

சூரியதரிசனம் விலக்கப்பட்ட நேரங்கள் எவை?

சூரியனை தரிசிக்க கூடாத நேரங்கள் எவை என்பது பற்றிய விளக்கம்

சூரியதரிசனம் விலக்கப்பட்ட நேரங்கள் எவை?

KarthigaBy : Karthiga

  |  4 Aug 2022 10:45 AM GMT

காலைக் கதிரவனை தரிசிப்பதற்கும் வணங்குவதற்தகும் பாரத கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாலை வேளையில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும் என்று ஒரு முறை உண்டு ஆனால் சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் பற்றியும் ஆச்சாரியர்கள் போதித்துள்ளனர்.

'சூரியனெனன்ற ஒரு நட்சத்திரம் பூமியென்றொரு கோணம்' என்று பண்டைக்காலத்தில் கூறியதுண்டு. இது பிரபஞ்ச கோடியின் சாஸ்திர அறிவியலின் தத்துவத்தின் அடிப்படையில் கூறுவது.

விண்வெளியில் அளவிட முடியாத வண்ணம் உலாவும் சூரியன் என்ற அற்புதத்தை பற்றி எத்தனையோ கதைகள் நாம் கேட்டிருப்போம் மிகப் பண்டைய காலம் முதல் மனிதன் ஆராதித்து வந்த ஒன்றுதான் சூரியன் இதற்கு உதாரணமாக விளங்குகிறது ஒரிசா மாநிலத்தின் கோனார்க் சூரியன் கோவில்.

பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொள்ளும் சூரியன் மிக மிக வெப்பமானது. மேல்பரப்பில் 6000 டிகிரி செல்ஷியஸ், மத்தியில் 15,000,000 டிகிரி செல்ஷியஸ் என்பது இதன் வெப்பம்.

சுமார் 14 லட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு உடைய சூரியனில் ஒவ்வொரு வினாடியும் 70 கோடி டன் ஹைட்ரஜன் அறுபத்தி 9.5 கோடி டன் ஹீலியமாக மாறுகிறது.

அணுக்கரு இணைவு விளைவாக சூரியனின் சக்தி உருவாகின்றது. வினாடிக்கு சுமார் 50 லட்சம் டன் சக்தி காமா கதிர்களாக வெளியேறுகின்றது. 450 கோடி வருடம் வயது கணக்கிடப்பட்ட சூரியனுக்கு இனியும் 500 கோடி வருடங்கள் இவ்வாறு எரிந்து நிற்க இயலும். நீரில் பிரதிபலிக்கும் போதும் நடுப்பகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது என்பது சாஸ்திரம் .இதை விஞ்ஞானமும் பின் தாங்குகின்றது

தானாக ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும் நடுப்பகலில் வெறும் கண்களால் சூரியனைப் பார்த்தால் மிக ஆபத்தான பார்வைக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு இதை பண்டைய காலத்து பாரத மக்கள் சூரிய சாபம் என்று அழைத்திருந்தனர். நீரில் பிரதிபலிக்கும் சூரியன் வருண பகவானுடன் இணைந்திருப்பதால் இக்காட்சி விளக்கப் பட்டது என்றும் தொன்றுதொட்டே நம்பியிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News