Kathir News
Begin typing your search above and press return to search.

சிதம்பர ரகசியம் என்பது உண்மையில் என்ன? ஆன்மீக ஆச்சரியங்கள்.!

சிதம்பர ரகசியம் என்பது உண்மையில் என்ன? ஆன்மீக ஆச்சரியங்கள்.!

சிதம்பர ரகசியம் என்பது உண்மையில் என்ன? ஆன்மீக ஆச்சரியங்கள்.!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  9 Nov 2020 5:30 AM GMT

சிதம்பரம் கோவில் என்பது இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது என சொல்லப்படுகிறது. இத்தலத்தை சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இதனை பூலோக கைலாசம் என்றும் அழைப்பர். இக்கோவில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நாற்பது ஏக்கர் பரப்பளவில் நாக்கு திசைகளிலும் நான்கு பிரமாண்ட கோபுரங்களுடன் மிக மிடுக்காக காட்சியளிக்கிறது. இக்கோவிலில் ஐந்து சபைகள் தனிச்சிறப்பு. இக்கோவிலின் தனித்துவம் என்னவெனில், இங்கிருக்கும் பெருமான் நடனம் ஆடும் நடராஜராக காட்சி தருகிறார். எப்போதும் ஆனந்த நிலையில் ஆடிக்கொண்டே இருக்கிறார். இவர் வலது புறம் மேல் கையில் உடுக்கையை வைத்திருப்பது உலகம் ஒளியின் மூலமே உருவானது என்பதை குறிப்பதாக இருக்கிறது என்கின்றனர். இதுவே இன்றைய நவீன காலத்தில் பிக் பாங் தியரி எனவும் அழைக்கின்றனர். இது போல் நான்கு விதமான ஆடல் அசைவுகள் இங்கே பதிவாகியுள்ளது.

இவை ஆக்குவது, அழிப்பது, காப்பது ஆகிய இயற்பியல் விதிக்களுடன் ஒத்திருப்பாதாக சொல்லப்படுகிறது. உலகின் பெரும் அணு ஆராய்ச்சி அமைப்பான ஜெனிவாவில் உள்ள CERN என்ற இடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக ஏதேனும் ரகசியம் குறித்த பேச்சு நம்மிடையே இயல்பாக எழுந்தால் நாம் பேச்சு வழக்கில் சொல்வது ஆம் பெரிய சிதம்பர ரகசியம் என்போம். உண்மையில் சிதம்பர ரகசியம் என்பது என்ன ? அதாவது சபாநாயகருக்கு வலது பக்கத்தில் ஒரு சிறிய வாயில் உண்டு. அதனை திரையிட்டு மறைத்திருப்பார்கள் அங்குள்ள திரை அகற்றப்பட்டால் அங்கு எந்த திருவுருவம் இருக்காது. வில்வத்தால் ஆனா மாலை மட்டுமே இருக்கும். இங்கே ஆண்டவன் ஆகாய ரூபமாக இருப்பதாக நம்பிக்கை . ஆகாயத்திற்கு முடிவும் தொடக்கமும் கிடைத்தது. இங்கே இருக்கும் ரகசியம் என்பதே இது தான்.

மனித உடலில் ஐந்து விதமான படிமங்கள் உள்ளன அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்பவையே அவை. அதனை உணர்த்தும் விதமாக இக்கோவில் ஐந்து திருச்சுற்று அமைந்துள்ளது. இவ்வாறு இக்கோவிலின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு உண்மையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நாள் போதாது சிதம்பரத்தை முழுமையாக தரிசிக்கவும் உணர்ந்து கொள்ளவும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News