அர்ச்சகர்கள் கூட தொடாத ஈசன் - அப்படி என்ன சிறப்பு இந்த ஆலயத்தில்?
அர்ச்சர்கள் கூட தொடாத எலுமியன் கோட்டூர் ஈசன் ஆலயம் பற்றிய தல வரலாறு காண்போம்.
By : Karthiga
தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுராசுரர்களை அழிக்க தேரில் ஏறி புறப்பட்டார் சிவபெருமான். பூமியை தேராக,சூரிய சந்திரர்கள் சக்கரங்களாக, பிரம்மன் தேரோட்டியாக, மேருமலை வில்லாக வாசுகி நாணாக நாராயண பெருமாளை அம்பாக கொண்டு ஆசிரியர்களை அளிக்க சிவபெருமான் சென்றார். அப்போது அவர் விநாயகரை வணங்கவில்லை. இதனால் வழியில் தேரின் அச்சு முறிந்து போனது. தேர் கவிழ்ந்தது.ஆனால் அது கீழே விழாமல் மகாவிஷ்ணு தாங்கி பிடித்தார்.
அப்போது சிவபெருமான் அணிந்திருந்த கொன்றை மாலை ஆனது மல்லிகை வனம் நிறைந்திருந்த இடத்தில் போய் விழுந்தது. அங்கே சிவனின் மாலை சுயம்புலிங்கமாக உருமாறியது. சுயம்புலிங்கம் உருவான மல்லிகை வனம் தான் தற்போது எலுமியன் கோட்டூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுயம்புலிங்கமாக இருக்கும் இறைவன் இவர்களுக்கு அருள் செய்ய புறப்பட்டவர் என்பதால் தேவநாயகேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
ஒருமுறை தேவலோக கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் தங்கள் அழகை புதுப்பித்துக்கொள்ள ஆலோசனை கேட்டு தனது குலகுருவான பிரகஸ்பதி இடம் சென்றனர். அவரோ நீங்கள் பூலோகம் சென்று தெய்வநாயகேஸ்வரரை வணங்கி வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த தேவலோக கன்னிகள் கூவம் நதிக்கரையில் இருந்த இத்தல இறைவனான தெய்வநாயகேஸ்வரரை கண்டனர்.
அவர்களுடன் திலோத்தமை, துகுனி, சுந்தரி, காமுகி ஆகியோரும் வந்திருந்தனர். பின்னர் அங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் வழிபாடு செய்தனர். மேலும் 16 பட்டைகள் கொண்ட ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். இதை அடுத்து அவர்களுக்கு யோக தட்சிணாமூர்த்தி வடிவத்தில் காட்சி கொடுத்த இத்தால இறைவன் அவர்களுக்கு வேண்டிய வரத்தை கொடுத்தார்.
அதன் பின்னர் தேவலோக கன்னிகள் அனைவரும் முன்பை விடவும் புதுபொலிவுடன் கூடுதல் அழகு பெற்று திகழ்ந்தனர். அரம்பையர்கள் வழிபட்டதால் இத்தலம் 'அரம்பையன் கோட்டூர்' என்று அழைக்கப்பட்டு பின்னர் 'எலுமியன் கோட்டூர்' என்றானதாக சொல்கிறார்கள். சுயம்புலிங்கமான இத்தலை இறைவன் தெய்வநாயகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவரை வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்கிறார்கள்.
கொன்றை மலரின் இதழை போன்று காட்சி தரும் இத்தல இறைவன் தீண்டா திருமேனி கொண்டவராக இருக்கிறார். பூஜையின் போது அர்ச்சகர்கள் கூட இந்த மூலவரை தொடுவதில்லை. ஒரு சிறு குச்சியின் உதவியுடன் தான் ஆடைகள் மலர்கள் போன்றவற்றை அணிவிக்கின்றனர். இந்த மூலவரின் மீது ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி முதல் 7-ம் தேதி வரையும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி முதல் 11ஆம் தேதி வரையும் சூரியன் தன்னுடைய ஒளிக்கதர்களை பாய்ச்சி வழிபாடு செய்கிறார்.
மன இறுக்கம் உள்ளோர் வாரம் தரும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மூலவரான தெய்வநாயகேஸ்வரரையும் யோக தட்சிணாமூர்த்தியையும் 11 முறை வலம் வந்து நெய் தீபம் ஏற்று வழிபாடு செய்தால் மன வலிமை பெறலாம். சென்னை அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ளது பேரம்பாக்கம். இங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 9 கிலோமீட்டர் தூரம் சென்றால் எலுமியமின் கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.