தம்மபதம் என்றால் என்ன? மனித குலத்திற்கு புத்தர் உணர்த்திய ரகசியம்!
By : G Pradeep
தம்மபதம் புத்தரால் உருவாக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க மனதை பற்றி பேசுகிறது. புத்தர் இறைவனை பற்றி எதுவும் பேசவில்லை. அவர் தத்துவர்த்தங்களாகவும் எதையும் பேசவில்லை. பலர் இவரை இந்து மதத்திற்கு எதிரானவர் என்று சொன்னாலும் புத்தர் இந்து மதத்தின் அற்புதமான பரிமாணத்தை உலகத்திற்கு வழங்கியவர். இவரை மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்றும் சில நூல்கள் சொல்லுகின்றன. புத்தரை பொறுத்த வரையில் எல்லா நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கும் மனமே காரணம், மனமே தூண்டு கோல், வண்டி சக்கரம் எருதின் காலடி குழம்புகளை தொடர்ந்து செல்வது போல் நல்ல மற்றும் தீய செயல்கள் மனதை தொடர்ந்து தான் செல்கிறது.
உலக வாழ்வும் மறு பிறப்பு சுழற்சியும் ஆசை மற்றும் மாயை என்ற இரண்டின் வலிமையாலேயே தொடர்கிறது நாம் காணும் இந்த உலகமும் அதன் தோற்றமும் அதன் மூலம் நாம் அனுமனுக்கும் அறிவும் உண்மையானது அல்ல. மாயையே நம் புலன்களின் மூலமாக வேலை செய்து நம்மை தீர்வுகளையும் முடிவுகளையும் எடுக்க வைக்கிறது. அதனால் புத்த மத த்யானத்தில் முதன்மையாக கற்றுத்தரப்படுவது ஆசை மற்றும் அறியாமை இல் இருந்து இருந்து வெளியேறும் பயிற்சி தான். இந்த இரண்டும் "தான்" என்கிற உணர்வால் வருவதால் அந்த உணர்வுகளை களைய கூடிய "கவனித்தால்" பயிற்சியை புத்தர் வடிவமைத்திருக்கிறார்.
நம் உடல் அசைவுகளை நாம் கண்காணிப்பது தான் முதல் படி, இதிலிருந்தே தியானம் தொடங்க வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆளுமை பெற்ற பிறகு மனதின் நிலைகளை கவனிக்க வேண்டும் அதன் ஏற்ற இறக்கங்கள் கோபம் சந்தோஷங்கள் என்று மனம் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு செல்வதை கவனிக்க வேண்டும் இப்படி கவனித்தல் என்கிற வழிமுறையை பின்பற்றினால் ஒரு கட்டத்தில் நாமே "கவனிப்பாக" மாறிவிடுவோம், நம் உடல் என்பதையோ மனம் என்பதையோ மறந்து கவனிப்பதே நாம் தான் என்கிற நிலைக்கு வருவோம். நாம் காணும் இந்த உலகமும் அதன் தோற்றமும் அதன் மூலம் நாம் அனுமானிக்கும் அறிவும் உண்மையானது அல்ல என்கிற தெளிவு பிறப்பதே நிர்வாண நிலையாகும்.