Kathir News
Begin typing your search above and press return to search.

பிரபஞ்சத்தின் பெரும் அதிசயம் என்ன? யமதர்மரின் கேள்விக்கு, யுதிர்ஷ்ட்ரரின் ஆச்சர்ய பதில்!

பிரபஞ்சத்தின் பெரும் அதிசயம் என்ன? யமதர்மரின் கேள்விக்கு, யுதிர்ஷ்ட்ரரின் ஆச்சர்ய பதில்!

பிரபஞ்சத்தின் பெரும் அதிசயம் என்ன? யமதர்மரின் கேள்விக்கு, யுதிர்ஷ்ட்ரரின் ஆச்சர்ய பதில்!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  7 Jan 2021 5:45 AM GMT

இந்த உலக வாழ்வை விட்டு நீங்கி செல்லும் ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரும், சுற்றமும் இணைந்து நிகழ்த்துவது இறுதி சடங்கு அல்லது மரியாதை. இது ஏன் இந்து மரபில் முக்கியத்துவம் பெறுகின்றது எனில், நம்மை விட்டு நீங்கிவிட்ட ஒருவருக்கு இறுதி சடங்கு செய்கிற போது, அவருடைய ஆன்மா முக்தியை நோக்கி செல்வதற்கு அது அதுவும் என்பதால்.

மரணம் என்பது எப்போதுமே ஒரு பெரும் புதிர் தான். இந்த உலகை விட்டு நீங்கிய பின் உயிருக்கு நிகழ்வது என்ன என்கிற தேடுதல் ஒருவரை ஆன்மீகத்தின் அடுத்த படிநிலைக்கு உயர்த்தி செல்லும். அந்த வகையில், மரணம் குறித்து மஹாபாரதத்தில் ஒரு குறிப்பு உண்டு. இந்த பிரபஞ்சதத்தில் பெரும் அற்புதம் எது ? என எமதர்மர் கேட்கிறார். அதற்கு யுதிர்ஷ்ட்ரர் எனும் தர்மர், தினம் தினம் எண்ணிலடங்கா மக்கள் உயிர் நீத்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் கூட எப்போதும் வாழ வேண்டும் என்கிற விருப்பதையும் மக்கள் வைத்திருக்கிறார்கள் “ இது பெரும் அற்புதம் என்றார்.

மரணம் என்பதை முழுமையாக ஏற்க மனித மனம் மறுக்கிறது. பல சமயத்தவர்கள் உயிரோடு இருக்கும் வரையிலான வாழ்வை மட்டுமே முக்கியத்துவம் அளித்து பேசுகிறார்கள். ஆனால் இந்து மதம் ஒன்றே வாழும் போது மற்றும் மரணத்திற்கு பின்னான வாழ்க்கை இந்த இரண்டு குறித்தும் முக்கியத்துவம் அளித்து பேசுகிறது.

இந்து மதத்தில் மட்டுமே, மரணம் என்பது உடலுக்கு மட்டும் தானே அன்றி உயிருக்கு அல்ல என்பதை திடமாக நம்புகிறது. இந்த ஆன்மா இந்த உடலை உதறிய பின் எந்தவொரு வடிவத்தையும் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப எடுக்கலாம் என்பதை எடுத்துரைக்கிறது. இப்போது நமக்கு எழும் அடிப்படை கேள்வி என்னவெனில், இறந்து விட்ட உடலை சிலர் புதைபார்கள், எரிப்பார்கள். நம் மரபில், ஒரு சிலர் புதைக்கவும் செய்கிறார்கள் எனினும் இறந்தவர்களின் உடலை எரிப்பதையே இந்து மதம் பரிந்துரைக்கிறது. காரணம் என்ன?

நெருப்பு என்பது புனிதமான விஷயமாக கருதப்படுகிறது. அந்த புனிதமான நெருப்பு அதனுள் எரிபவற்றை எந்த வித துகள்களும் இன்றி முழுமையாக எரித்து தன்னகத்தே இணைது கொள்கிறது. இறந்த உடலை புதைக்கிற போது அவை ஐம்பூதங்களுடன் கலக்க பல காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் எரிக்கிற போது, அவை உடனடியாக பஞ்ச பூதங்களுடன் கலப்பதுடன். அந்த உடலுடன் தொடர்புடைய ஆன்மா விரைவான விடுதலையை எட்ட வழிவகுக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News