Kathir News
Begin typing your search above and press return to search.

சுபம் லாபம் என வீட்டு வாசலில் எழுதுவதால் ஏற்படும் அதிசய நன்மை என்ன?

சுபம் லாபம் என வீட்டு வாசலில் எழுதுவதால் ஏற்படும் அதிசய நன்மை என்ன?

சுபம் லாபம் என வீட்டு வாசலில் எழுதுவதால் ஏற்படும் அதிசய நன்மை என்ன?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  6 Feb 2021 6:00 AM GMT

இந்தியாவிலுள்ள வீடுகளில் பெரும்பாலானவற்றின் முகப்பில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு, அதில் சுபம் லாபம் என்று எழுதப்பட்டிருக்கும். இதில் ஸ்வஸ்திக் என்பது முழு முதற் கடவுளான விநாயகரின் அடையாளம் . வட இந்தியாவில் கணபதி மணமானவராகவும் அவருக்கு இரு மனைவிகள் எனவும் வழிபடப்படுகிறார். அந்த இருவர் தான் சுபம் லாபம் என்பது மக்களின் நம்பிக்கை.

அந்த பெயர்கள் குறிப்பதை போல சுபம் என்பது நன்மையையம், லாபம் என்பது நல்ல செல்வ வளத்தையும் குறிப்பதாக உள்ளது. சுபம் லாபம் இந்த இரண்டையும் வேண்டி ஒருவர் வழிபடும் போது கணேசர், லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரையும் சேர்த்து வழிபடுவது வழக்கம்.

ஏன் கணபதியையும், அவருடைய அம்சமான ஸ்வஸ்திக் சுபம் லாபம் எனும் அடையாளத்தையும் ஒரு முகப்பில் வழிபட வேண்டும். கணபதியின் திருவுருவத்தை உற்று கவனித்தால் அவருக்கு பெரிய காதுகள் இருப்பதை போன்ற தோற்றம் இருக்கும். அதன் பொருள், அவர் அனைத்தையும் முழுமையாக கேட்கிறார். எனவே ஒரு வேலையை தொடங்கும் போதும், புதிதாக ஒரு விஷயத்தை துவங்கும் போதும், பயணத்தின் துவக்கம் என அனைத்தின் துவக்கத்திலும் நம் வேண்டுதல்களை அவர் முழுமையாக கேட்கிறார் எனவே அவருடைய அம்சத்தை வைத்து வணங்குகிறோம்.

கணபதியின் அம்சமான ஸ்வஸ்திக்கை வைத்து வழிபடும் வேளையில் அங்கே சுபம் லாபம் என எழுதுகிறோம். இதனை எதில் எழுத வேண்டும் சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமத்தில் எழுதுவது சிறப்பு. இவ்வாறு ஒருவர் எழுதுகிற போது அதன் அதிர்வுகள் இலட்சுமியின் அருலை ஈர்ப்பதாக அமைகிறது. சுபம் என்பதை எழுதுகிற போது, இருக்கும் நன்மைகள் அனைத்தும் இந்த இடத்தை வந்து சேர வேண்டும். லாபம் என்பது அனைத்து வளத்தையும் ஈர்ப்பதாக உள்ளது.

இந்த அனைத்தும் முறையாக நிறுவப்பட்டு, யந்திரமாக கிடைக்கிறது. இந்த யந்திரம் இலட்சுமி மற்றும் கணபதி இருவருக்குமானதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மஹா யந்திரம் என்றும் அழைக்கின்றனர். இதில் கணபதி ஞானத்தை வழங்குபவராகவும், இலட்சுமி வளத்தை அருள்பவராகவும் இருக்கிறார்.

இந்த யந்திரத்தை பணம் வைக்கும் இடத்திற்கு அருகே வைக்கலாம். அல்லது பூஜையறையில் வைத்து முறையாக தீபமேற்றி தியானிக்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News