Kathir News
Begin typing your search above and press return to search.

பாற்கடலை கடைந்த நிகழ்வு மனிதர்களுக்கு உணர்த்தும் அதிசய செய்தி என்ன?

பாற்கடலை கடைந்த நிகழ்வு மனிதர்களுக்கு உணர்த்தும் அதிசய செய்தி என்ன?

பாற்கடலை கடைந்த நிகழ்வு மனிதர்களுக்கு உணர்த்தும் அதிசய செய்தி என்ன?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  14 Dec 2020 5:45 AM GMT

நம்முடைய புராணங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும், மஹாபாரதம் விஷ்ணு புராணம் பாகவத புராணம், ஆகியவை பாற்கடலை கடைந்த நிகழ்வை விரிவாக விவரிக்கின்றன. துர்வாசரின் சாபத்தால் பலஹீனம் அடைந்த தேவர்களின் நிலையையும் அரக்கர்களின் நிலையை நமக்கு உணர்த்துவதாகும்.

பாற்கடலை கடைதல் என்பது மனித குலத்துக்கு உணர்த்தும் முக்கிய செய்தி ஒன்று உண்டு. இந்த நிகழ்வு அரக்கர்களும் தேவர்களும் ஒருவரை ஒருவர் புறம் தள்ளாமல், இருவரும் சமநிலையில் நின்று நிகழ்த்திய நிகழ்வாகும். இது நமக்கு சொல்லும் செய்தி யாதெனில், நன்மை மற்றும் தீமை என்பது ஒருவர் வாழ்வில் சமநிலையுடன் ஏற்படும் ஒன்றே அன்றி, ஒருவருக்கு நன்மை மட்டுமே நிகழும் என்பதில்லை. ஒருவருக்கு தீமை மட்டுமே நிகழும் என்பதில்லை.

பாற்கடலை கடைகையில் ஏராளமான விஷயங்கள் இந்த உலகிற்கு கிடைத்தன. இவை உணர்த்துவது யாதெனில், மனம் என்பது ஒரு கடலை போன்றது, அதனை ஞானம் எனும் மத்தினை கொண்டு கடைகிற போது நம் ஆழ்மனதினுள் ஆழ்ந்திருக்கும் பல விஷயங்கள் வெளியேறும். அதில் தர்ம சிந்தனைகளை ஒத்த சாரங்க வில், ஐராவதம் யானை, போன்றவையும் அடங்கும், காமத்தை குறிக்கும் அப்சர கந்தர்வர்கள், வருணி போன்றவையும் அடங்கும். மோட்சத்தை குறிக்கும் சங்கு போன்றவையும் அடங்கும் ஆலஹால விஷமும் அடங்கும்.

ஒரு மனித மனதில் அலைப்போல நினைவுகளிலிருந்து தர்மம், தீமை, மோட்சம், மோகம் போன்ற அனைத்து விதமான சிந்தனைகளும் வெளியேறுகிற போது அவர் அமிர்தத்தை போன்ற தூய ஆன்மாவாகிறார். இந்த பாற்கடலை கடையும் நிகழ்வில் நமக்கு கிடைத்த பல முக்கிய நிகழ்வுகள் உண்டு. அதில் ஒன்று தான் சிவபெருமான் ஆலஹால விஷத்தை உண்டது. இந்த கொடிய விஷத்தின் தாக்கத்தில் இருந்து பிரபஞ்சத்தை காப்பாற்ற சிவபெருமான் ஆலஹால விஷத்தை அருந்திய போது பார்வதி தேவி அந்த விஷத்தின் அபாயம் அவரின் உடலெங்கும் பரவாமல் தடுக்க சிவபெருமானின் தொண்டையிலேயே அவ்விஷத்தை தடுத்தாட் கொண்டார் பார்வதி தேவி. இதன் விளைவாக நீல நிறமாக அவர் தொண்டை மாறியாதாலேயே நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.

இந்த பாற்கடலில் இருந்து பெற்ற ஏராளமான பொருட்களும், தேவதைகளும், தேவர்களும் நமக்கு கிடைத்தனர். சந்திரன், பாரிஜாத மலர், ஐராவதம், காமதேனு, வருணா, கல்பவிருக்‌ஷம், அப்சரஸ், லக்‌ஷ்மி தேவி, விஷ்ண்வின் புனிதம் நிறந்த சங்கு, வில் மற்றும் அம்பு, ஆரோக்கியத்தின் தேவரான தன்வந்த்ரி இவரே அமிர்த கலசத்துடன் தோன்றிவர். இது போல் கிடைத்த பொருட்களை தேவர்கள் தங்களுக்குள்ளாக பகிர்ந்து கொண்டனர். எக்காரணம் கொண்டு இவற்றை தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்தாமல் உலகத்தின் நல்வாழ்விற்கு பயன்படுத்துவோம் என்ற சூளுரையுடன் பகிர்ந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News